பருவங்கள் மாற, மணித்துளிகள் நாட்களாய், வாரமாய், மாதமாய்
மறைந்து போகின்றன.ஆனால் இந்த எண்ணங்கள் மட்டும், ஏன்
விட்டுப்பிரியாமல், ஓய்வே இல்லாமல், அமைதியின் மடியில்
சாயாமல், எல்லாம் போனபின்பும் என்னைச் சுற்றிச் சுற்றி
வந்து என் உறக்கத்தை கவர்ந்து போகிறது? கட்டுப்பாடற்ற
காட்டாற்று வெள்ளமாய் அடித்துச் செல்கிறது! தெரியுமா?
==========
மலைச் சிகரங்களைத் தழுவிச் செல்லும்
வெண்மேகங்களைப் போல -நாம்
பிரிவதற்கே சந்திக்கிறோம்!
சந்தித்த சுவடுகள் கூடத் தெரியாமல்!
==========
———-
நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னால்
உன்னை எனக்குத் தெரியாது!
இப்போதும் உன்னை எனக்குத்
தெரியவில்லை! என்ன ஆச்சரியம்!
————-
உன்னுடையது என்று நீ எதனை
விட்டுப் போனாய், உன் குழந்தைகளை…,
குழந்தைகள் அவரவர் வாழ்க்கைப் பாதையில்! என்னுடையது என்று
எதுவுமேயில்லை என்னைத் தவிர
No comments:
Post a Comment