29 Nov 2011

My childhood Days.

.
                                    Now I am 66 and when I go back in memory lane to my childhood days I feel so happy.  I read an article in ‘The Hindu’ and that made me to do some writing. I was born in Salem district, Tamilnadu. My father built a house at Swarnapuri, a colony near 5 roads. Now it is the center, with the New Bus stand.
                                    In the year 1951, we shifted to the new house. Salem dt is famous for its water scarcity and so along with my mother I used to carry a small bucket to the public water tank. A big water tank was there at the back yard of the house and we had to fill it up.  Our next door neighbour's  had a big family with seven children. We would go to the next house not  through the main entrance. We used to jump over the compound wall only. Evenings were fun filled with games like kilithattu,  Gilliththandy, Marble-Goli aattam, Pambaram, Pandy,  Kannamoochchi, Catching game, kambuththalli  and others. One more game I remember. We used to sit in circle and the person who was out will hold a kerchief in hand and run around singing, ''குலை குலையா முந்திரிக்கா, நிரைய,நிரைய சுத்தி வா,கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான், கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி.'' Then he will drop the cloth behind someone and the game will go on.
                           
    Whenever there was current cut we used to be very happy and run out to play. One day my father brought a petromax Lamp and we cursed the man who found out that light. No more play at nights. Summer holidays were great fun. We used to enjoy day in and day out playing  indoor games like Pallanguzhi, seven stones, one, two or empty, Thaayakkattam and Anthaakshari  will go on till the evening.
My paternal grandmother used to tell stories.  I was her letter writer. Everytime I wrote a letter she would  give me a quarter anna.   I used to escort her to the temple, Bhajans and Upanyaasams in our colony. She used to sing some old country songs on how the train introduced by the Britishers were a wonder.

We had a beautiful garden at home with Gova, sappota trees, a vegetable garden and flowering plants. Gardening was a great hobby which made me one with nature. The  stick ice brought in big thermass flask had its own wonderfull smell and taste.
Playing, singing, wandering without any thought of future and studies we really had a wonderful childhood. Life’s problems, worries, pains and expectations are there always  in every ones lives. We crossed the bridges whenever necessary  and lived our lives as and how it came. I studied in St.Mary’s School which was a kilometer away from home.It was a pleasure to hang the bag with very few books on the head and walk along the green fields under the shades of Tamarind trees. Collecting tender tamarinds and that which were about to ripe with a light green colour were our favourite play.
There was a burial ground on my way to school and I have seen the dead bodies being brought there. It never frightened me and took it as part and parcel of life.
image
The school was another place of happiness. They gave importance to reading, hand writing and recitation.Once a child becomes thorough with the Alphabets of the Mother tongue and the ability to read and write fluently self confidence instills itself in the child. I remember a small incident when I was in std 1.One day our teacher asked all of us to bring one rupee for the orphanage children as donation.  My father gave me a beautiful one Rupee coin and gave me a quarter anna which was known as(காலணா) in those days for me to buy a”’ mittayi’. I loved the (கம்மர் கட்டு மிட்டாய்) made out of coconut and jaggary. When the Head mistress came to collect the money I gave her the one Rupee and the’ kalana’ to her and told her that I want her to buy a mittay for the orphanage. She was so happy to hear my words and patted me.To give is a great thing in life. I have seen the orphanage attached to the school and used to feel very sad on seeing those children. I studied in the school upto my 7th std.
My mother wanted me to learn music and so they found out a teacher who was also teaching our neighbour's daughters. It was a pain to see him at 8 o’ clock in the morning disturbing me getting ready to school. If I start singing the previous days song he will raise his voice and his eyebrows and that was the end of music. I regretted for not learning the art later on in my life.
It was a joy to go to my maternal grandparents house at Ottappalam, in Kerala. The small house was surrounded by Jackfruit, Mango and coconut trees and the Pineapple shrubs surround the house like a compound wall.It was like today’s holiday resort. Woodpecker’s accompany the music of the koeils, and Fire flys at the dark nights made us spellbound. There was no electricity. My grandma used to make us sit around her with a pot full of curd rice and would tell us stories while placing the rice in our palms. The story and the food made us sleep and dream about the characters of the story.
Thinking about my childhood days I feel so happy that I was like a butterfly free and all those elders and friends made it worthy of treasuring it in my memory till today.

27 Nov 2011

கணந்தோறும்........


                        புகைப்படமும், நிழற்படமும் காண்பவர்கள்  கண்முன்னால்,
                         நீயோ படமுமில்லை, நிழலுமில்லை  கணந்தோறும்
                         சுழலுகின்றாய் கண்ணுக்குத் தெரியாமல்!
                         என் கண்கள் காணவில்லை கண்முன்னால் நீ!
                         குரலொலியோ கேட்கவில்லை  பேசுகிராய் நீ!
                          என் நெஞ்சில் உணர்வுகளாய் எப்போதும் நீ!
                         உன்னோடு என் பயணம் இறுதி மட்டும்,
                         கணந்தோறும்.    

25 Nov 2011

அன்னை.


                              நிலவு முகம், நீள் நீல விழி மலர்கள்,
                              பொங்கித் ததும்பும் ஆனந்தம்.
                              பிறை நிலவின் நடுவே ஒளி வீசும்,
                              மாணிக்கப் பரல்கள் போன்ற பற்கள்.
                              மலர்ந்து மகிழ்வைப் பரப்பும்
                              மந்தகாசப் புன்னகை.அமைதியை
                              அன்பை,அதில் விளையும் அழகை
                              ஆனந்தத்தைப் பிரதிபலிக்கும்
                              காந்தக் கண்கள்.மனதைச் சுண்டி
                              இழுத்துத் தன்னுள்ளே இணைக்கும்
                              பார்வை.வாழ்வின் வழிகாட்டி,
                              ஒளி பொருந்திய பாதையில்
                              மானுடத்தை அணைத்து அழைத்துச்
                              செல்லும் ‘அன்னை’ யின் பொற்
                              பாதங்களுக்கு வணக்கம்.

20 Nov 2011

பயணம்.

 
                           நம்முடைய விருப்பத்தைக் கேட்காமலேயே பயணம் தொடர்கிறது. எப்போது, எங்கு, எப்படி அது நிற்கும் என்பது தெரியாது!  வாழ்க்கை  எப்படியோ என்னை  ஒரு ஒன்றுமில்லாத ஜடமாக்கிவிட்டது. உன்னுடைய பிரிவின் தாக்கம் என்னை என்னவெல்லாம் செய்துவிட்டது?
யாரோ சொன்னார்கள் உன்னை மறக்கமுடியாதென்று! புயலடிக்கும் கடல் தன்னுடைய அலைகளாகிய தொட்டிலின் தாலாட்டில் அமைதியடையவில்லையா? காட்டுத் தீ சாம்பல் படுக்கையில் உறங்கவில்லையா?
நீயும் நானும் பிரிந்தாலும், அதனால் ஏற்பட்ட வெற்றிடத்தில் பசும் புல்லும், வண்ண மலர்களும் சூரிய ஒளியில் சிரிக்கின்றனவே! தென்றல் காற்றின் மென் தழுவல் சிலிர்க்கவைக்கிரதே! வட்டநிலா வான் வெளியில் ஒளி வீச உன் பொன்முகம் கண்டு என் உள்ளத்தில் தூய அன்பு பொங்கிப் பெருகும். அமைதி பிறக்கும். ஆனந்த அலைகள்தோன்றும். உன்னில் நான் அமைதியடைவேன். என்னில் நீ!  நிசப்தத்தின் மடியில்  நீயும் நானும்! பேசாத மவுனத்தின் இசைக்கும் ஒலியில் எல்லாம் மறக்க எய்தும் சுகம்!  மறக்க முடியாத சுகம். நினைவுகளுடன் நிலைத்து நிற்கும் சுகம்.

17 Nov 2011

கல்யாணம்.


விரலுக்கு மோதிரம், வலது கைக்கு வாட்ச், இடது கைக்குக் கடகம்,
கழுத்துக்கு மைனர் செயின், கோட்டுடன் சூட்டு, பூட்சு, குடை, விசிறி,
கட்டிலுடன்.மெத்தை, போர்வை, காட்ரெஜ்  பீரோ, சாப்பிட வெள்ளித்
தட்டு ,டம்ளர், தேனிலவுக்கு டிக்கெட், ஏ.சி. ரூம்,இத்தனையும் நீ
செய்தால், மஹாராஜாபோல நானும் உன் பக்கம் வந்து நின்று
கல்யாணம் செய்து கொள்வேன், சம்மதமா என்றான் தோழி!
நல்லவேளை இடுப்புக்கு ஒட்டியாணம், காதுக்கு வைரக் கடுக்கன்
காலுக்கு வீரக்கழல், இவையெல்லாம் வேண்டாமென்றாய்!
நான் என்ன வியாபாரம் பேச வந்தேன்,என்று நீ நினைத்தாயோடா?
பாவை நான் என்ன, தங்கச் சுரங்கம் வைத்துள்ளேனா? பக்கத்தில்
பணம் காய்க்கும் மரமும் இல்லை! பெற்றவர்கள் என்னை
பெண்மைக்குப் பெருமை சேர்க்க, நிமிர்ந்த நன்நடை, நேர்
கொண்ட பார்வை, கல்விச்செல்வம், விருந்தோம்பல், கொடை,
வீரம், தயவு, கருணை என நற்குணச் செல்வம் பலவும் பரிவுடன்
எந்தன் உள்ளம் மகிழ்ந்திடத் தந்துள்ளார்கள். உனக்கு
வாழ்க்கைத் துணை நலம் வேண்டுமா, அன்றிப் பொருள் கொடுத்து
உன்னை வாங்கும் வியாபாரி வேண்டுமா நீயே சொல்வாய்.

அந்த நாள் ஞாபகம்

 
      அந்த  நாள்  ஞாபகம் வந்ததே என் சொல்வேன் தோழி,
      மாலையிட்டுக் கரம் பிடித்து, மாங்கல்யம் பூட்டிய நாள்,
      மறக்க முடியுமா தோழி? …….மணந்ததும், வாழ்ந்ததும்
      பெற்றதும், வளர்த்ததும், மறக்கமுடியுமா தோழி?
      காலம் போனதும், காலன் வந்ததும்  கண்ணில்
      நிற்குதடி தோழி! இல்லாமல் இருக்கின்றார்,
      பேசாமல் பேசுகின்றார், எப்போது மீண்டும்
      என்னிடத்தே வருவார் சொல் தோழி?                                   

10 Nov 2011

சிரிப்பு


    சிரிப்பில் தான் எத்தனை வகை, அசட்டுச்  சிரிப்பு,
    அவிட்டுச் சிரிப்பு, அறுவைச் சிரிப்பு, ஆஹா……..
    ஆனந்தச்சிரிப்பு, விகடச்சிரிப்பு, வில்லன் சிரிப்பு,
     நமுட்டுச் சிரிப்பு, நாணச்சிரிப்பு, ம்ம்ம்ம்ம்ம்ம்,
    குபீர்ச்சிரிப்பு, குப்புறச்சிரிப்பு, விழுந்து விழுந்து„
    விக்கல் எடுக்க, புன்னகையோ,
    கடமைக்காக, கடனுக்காக, கற்பனைக்காக,
    காசுக்காக, காதலுக்காக, காரணத்துக்காக…..
    என்னுடைய புன்னகை
    என்னில் என்னுடன்,எனக்காக!——

தனியே.

தனியே.
தனியே தாய் வயிற்றில் வாசம்,தனியே நிலமகள் மேல் ஜனனம்,
தனியே விருப்பும், வெறுப்பும், தானே தனக்காய் வாழும்.
தனியே கடைசிப் பயணம்,தனியே நெருப்பில் தகனம்,
தனியே நீரில் கரையும், தனியே தானாய் மறையும்.
நான் என்றும் எனதென்றும் ,தானென்றும் தனக்கென்றும்
மாயச்சுழ்லில் சுழலும்.
நானும் இல்லை,நீயும் இல்லை,எனதும் இல்லை உனதும் இல்லை
காலம் போனால் எதுவும் இல்லை,காலன் வந்தால் ஒன்றும் இல்லை.  

3 Nov 2011

வியப்போடு உலகைப் பார்க்கும் குழந்தை,
வெறுமையாய் வானம் பார்க்கும் முதுமை!!                              
                  ——-
தாய்ப்பறவைகள் இரண்டும் கூட்டைச் சுற்றிச் சுற்றி வந்து
குஞ்சுகளைத் தேடுகின்றன …………………………….
சூரியனோ மேகத்தின் பின் மறைந்து கொள்கிறான்,
மேகங்களோ கண்ணீர் மழையைத் தூவும்,
காற்று மவுனமாய் சாட்சி சொல்ல,
பூங்காவே துக்கத்தில் மலர்களை சமர்ப்பிக்கும்.