மாலையிட்டுக் கரம் பிடித்து, மாங்கல்யம் பூட்டிய நாள்,
மறக்க முடியுமா தோழி? …….மணந்ததும், வாழ்ந்ததும்
பெற்றதும், வளர்த்ததும், மறக்கமுடியுமா தோழி?
காலம் போனதும், காலன் வந்ததும் கண்ணில்
நிற்குதடி தோழி! இல்லாமல் இருக்கின்றார்,
பேசாமல் பேசுகின்றார், எப்போது மீண்டும்
என்னிடத்தே வருவார் சொல் தோழி?
No comments:
Post a Comment