31 Mar 2012

பாரத மாதாவிற்கு வந்தனங்கள்!

நேற்றுதான் நடந்தது போல் இருக்கிறது. கல்லூரிப் படிப்பின் கடைசி வருடத்திலேயே விமானப்படையில் சேர விளம்பரம் பார்த்து  விளையாட்டாக விண்ணப்பிக்க, நேர்முகத் தேர்வுக்கு வரும்படி அழைப்பு வர இந்தப்பையன் நான் அதில்தான் சேருவேன் எனப் பிடிவாதம் பிடித்து மைசூருக்குப்  போனான். உயரம், எடை, அவர்கள் நடத்திய கடுமையான  உடல்பயிற்சித் தேர்வுகளில் நன்றாகச் செய்ததால் படிப்பு முடிவதற்குள்  வேலையில் சேர உத்தரவு வந்துவிட்டது.

எத்தனையோ எடுத்துச் சொல்லியும், வேறு வேலைகளுக்கு முயற்சிக்கலாம், அல்லது மேல்படிப்பு படிக்க, அமெரிக்கா செல்ல முயற்சி செய்யலாம் என்று மனதை மாற்ற எண்ணியும் பிடிவாதம் காரணமாக விமானப் படையில் சேர்ந்தான்.

நாங்கள் பெங்களூர் மாற்றலாகி வந்த வருடம், அவனுக்கும் இங்கேயே இரண்டு வருடம்  பயிற்சிக் கல்லூரியில் டிரெயினிங்.  செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி, பிள்ளையார் சதுர்த்தி தினம். காலை ஒன்பது மணிக்கு ரயில்வே நிலையத்தில் ரிப்போர்ட் செய்யவேண்டும். விடியற்காலையில் எழுந்து, அவனுக்குப் பிடிக்கும் என்று கொழுக்கட்டைகள் செய்து, பொட்டலம் கட்டி ஸ்டேஷனுக்குப் போனது நேற்றுதான் நடந்தது போல் இருக்கிறது.

அவனுடைய டிரெயினிங் காலம் முடியும் வரையிலும் ஒவ்வொறு பண்டிகைக்கும், அவனுக்குப் பிடித்த சமையல் செய்யச் சொல்லி, டிபன் கேரியரில் நிரப்பி, தான் சாப்பிட்டாரோ இல்லையோ, எங்கள் காதல் வாகனம் ''லூனா,''வில் என்னையும் வற்புறுத்தி ஏற்றிக் கொண்டு  வழிதெரியாமல் சுற்றி வந்து திண்டாடி, ஒரு வழியாய் ''ஜலஹள்ளி''யைக்  கண்டு பிடித்து அவன் ரசித்துச் சாப்பிடுவதைக் கண்டு ஆனந்தப்பட்டிருக்கிறார் அவன் தந்தை.

தேசத்தின் பாதுகாப்புக்காக சேவை செய்யும் ஒரு பணியில் மகன் இருப்பது பெருமைக்குரிய ஒரு விஷயந்தான் என்றாலும் வசதிகளற்ற, தனிப்பட்ட வாழ்க்கை அவர்களுடையது.

கட்டுப்பாடுமிக்க இவர்களுடைய வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் துணையாக பொது வாழ்க்கை! பரோடா, ஶ்ரீநகர், லூதியானா, மும்பை என எல்லா ஊர்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது என்றாலும் என் கணவருக்கு மனதில் ஒரு குறைதான். தன் பிள்ளையும் நண்பர், உறவினர் குழந்தைகளைப் போல  கை நிறைய வெளி நாடுபோய் சம்பாதிக்கவில்லை என்று!  ஆனாலும் எல்லோரிடமும் தன் பிள்ளையின் 'Rank,' சேர்த்துதான் பெருமையாக சொல்லுவார்! எல்லோருக்கும் தேச சேவைக்காக தங்கள் குழந்தைகளை அனுப்பும் வாய்ப்பு கிடைப்பதில்லையே!

 நாங்கள் ஜம்மு-காஷ்மீர் சென்றிருந்த போது நூறடிக்கு ஒருவராக பாதுகாப்பு கவசம் அணிந்து, கையில் கனமான துப்பாக்கியை ஏந்திக் கொண்டு கடும் குளிரில் நின்று கொண்டிருந்த ஜவான்களைப் பார்த்து நெஞ்சம் நெகிழ்ந்தேன். பெருமையடைந்தேன்.  என்னுடைய குழந்தைகளாக அவர்களை நினைத்து அவர்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொண்டேன்.

என் வாழ்வில் மறக்கமுடியாத தருணம் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நடந்தது. அமிர்தசரஸ் பொற்கோவிலைத் தரிசித்தபின்  (Wagah) 'வாகா' எல்லையை அடைந்தோம். மாலையில் தேசக் கொடி இறக்கும் வைபவம்! பார்வையாளர்களால் நிரம்பியிருந்த அரங்கில் பாரதமாதாவிற்கு ஜே என்ற கோஷம்  வானை நிரப்பியது. பாதுகாப்பு வீரர்கள் கால்களை வீசி வீசி நடக்க, பார்வையாளர்கள் தேசியக் கொடியை கைகளில் வைத்து அசைக்க  எங்கும் தேசபக்தி வெள்ளம்!

என் கைகளுக்கும் கிடைத்தது தேசியக் கொடி! இரு கைகளிலும் அதனைப் பற்றிக் கொண்டு, உணர்ச்சி வசப்பட்டு ''பாரத் மாதா கி ஜே'' என்ற கோஷத்தால் நிரம்பிய வான வெளியில் ,  காற்றில் அசைந்த தேசக் கொடியைப் பார்த்து நின்ற அத்தருணம்  என் கண்ணீர் மலர்கள் பூமித் தாய்க்கு சமர்ப்பணமாயிற்று! இந்தியத் தாயின் மகளாய், அவளுடைய பாதுகாப்பிற்காக மகனை அர்ப்பணித்த தாயாய் பூரிப்படைந்தேன்.

பார்லிமெண்ட் தாக்கப்பட்டவுடன் நாடு முழுவதும் இருந்த  வீரர்கள் அனைவரையும் மீண்டும்அழைத்தது ராணுவம். நாடு தாக்கப்பட்டால் தயார் நிலையில் இருக்கவேண்டிய நிர்பந்தம்.  இந்தியாவின் ஒவ்வொரு ஊரின் ரயில் நிலயங்களிலும் ராணுவ வீரர்கள் பயணம் செய்த ரயில்களைச் சூழ்ந்தது மக்கள் கூட்டம்.

கிராம ஜனங்கள் விற்பனைக்குக் கொண்டுசெல்ல வேண்டி வைத்திருந்த உணவு,
காய்கறி மூட்டைகளை ஜவான்களுக்கு அளித்து, கட்டியணைத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்த செய்திகளைச் சொல்லக்கேட்டு, நம் நாட்டு மக்களின் தேசப்பற்றையும், ஓற்றுமையுணர்வையும் உணர்ந்து பெருமையடைந்தேன்.

மஹாகவி பாரதி பாடினானே,

''ஆயிரம் உண்டிங்கு ஜாதி -எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி? ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ?''---என்று!

ஆம் நம் நாட்டு மக்கள் தேசப்பற்று மிக்கவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இமாலயப் பனியிலும், குளிரிலும், மழையிலும், வெயிலிலும், இருபத்து நான்கு மணி நேரமும், முன்னூற்று அறுபத்து ஐந்து நாட்களும்  நாட்டுக்காகப் பணிபுரியும் நம் வீரர்களின் பணி மகத்தானது.   இளமைக் காலம் முழுவதையும் நாட்டின் பாதுகாப்புக்காக அர்ப்பணித்த, அர்ப்பணிக்கும் ஒவ்வொரு இந்தியப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். வந்தேமாதரம்! பாரதத் தாய்க்கு என்றும் வெற்றி உண்டாவதாக! ஜெய பாரதம்!




28 Mar 2012

Humour

In 1990's the most popular programme broadcasted by All India Radio Chennai was ''Today's information'' ( இன்று ஒரு தகவல்). This programme  was presented by Sri. Thenkachi  swaminathan daily. Every household waited to hear him so that the day began with a sense of humour. The two minute story with a joke will make us laugh for a long time. Here are two such narratives.

An industrialist gave a party to a VIP. After the party he came forward to present the VIP  a brand new car.
The VIP refused the offer saying that he has come to such a high post only to serve the people and that he was honest and will not accept anything  free.
But the industrialist told him to give only one rupee as a token amount and take the car so that it is not free.
The VIP called the industrialist near him, gave him 10 Rs and said,''Kindly send 10 cars to my address.''

---

One man known to me met his friend in the market. He went to him and gave a nice blow. The friend asked him, ''Why did you beat me?''

Why did you go and tell my wife that I am a fool?

Oh, did you beat me for telling that?

It is okay if you tell somebody. But why did you tell it to MY wife!!??

---

25 Mar 2012

A Question Mark?

                    A college student was in a philosophy class, where a class discussion about ''whether or not God exists'' was in progress. The professor had the following logic;
"Has anyone in this class heard God?''
Nobody spoke.
"Has anyone in this class touched God?''
Again nobody spoke. 
''Has  anyone in this class seen God?''
When nobody spoke for the third time he simply stated, ''Then there is no God.''

One of the students stood up and asked the following questions:
"Has anyone in this class heard our professor's brain?''  Silence.
''Has anyone in this class touched our professor's brain?'' Absolute Silence.
''Has anyone in this class seen our professor's brain?''

When nobody in the class dared to speak, the student concluded, ''Then according to our professor's logic, it must be true that our professor has no brain!''

( Reproduced from ''The Awakening Ray, March 1999. The Gnostic centre)

21 Mar 2012

Pink Delight from Kamala's kitchen

அது என்ன வெங்காயக் கலர்ல ஆனந்தம்? வெங்காயத்தை உரித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது என்ற பாட்டைக் கேட்டிருப்பீங்க இல்லையா? அதனால் தான் எல்லாருக்கும் பிடித்தது வெங்காயம். வெய்யில் காலம் வந்து விட்டது. நம்மை சூட்டிலே காய வைக்கிறது. கொஞ்சம் வெங்காயத்தையும் காய வைக்கலாமே!

1.  இரண்டு வெங்காயத்தை வட்ட வட்டமாக நறுக்குங்கள்.அதன் மேல் எலுமிச்சம் பழத்தைப் பிழியுங்கள். சிறிது உப்பு சேருங்கள். பிடித்தவர்கள் ஒரு பச்சை மிளகாயை மெல்லியதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். அரை மணி நேரத்தில் பயன் படுத்தலாம். வெய்யிலுக்கு இதமானது. அப்படியென்றால் வெயில் சாப்பிடுமா என்காதீர்கள். சாம்பார் சாதத்திற்கு,  இதய நிறத்தில் இதமான  துணை இது.




2. அடுத்தது வெங்காயத் தொக்கு. தேவையான அளவு வெங்காயத்தை தோல் நீக்கிப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். உப்பு சேர்த்து எலுமிச்சம் பழச் சாறை அதில் சேருங்கள்.  ஒரு நாள் முழுதும் ஊற வையுங்கள். மறு நாள்  வெங்காயத்தை பிழிந்து எடுத்து ஒரு தட்டில் போட்டு வெயிலில் காய வையுங்கள்.
காய்ந்த வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு ஒரே ஒரு சுற்று ஒன்று சேர்வதற்காக!

வெறும் வாணலியில் இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை வறுத்துக் கொண்டு, விரலி மஞ்சள் கிழங்கு ஒன்றைத் தட்டி வாணலியில் சூடு படுத்திக் கொள்ளுங்கள். அதிலேயே ஒரு ஸ்பூன் கடுகு சேர்க்கவும்.இவற்றை மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.

வாணலியில் இதயத்தை[நல்லெண்ணை] விட்டு கடுகு வெடித்தவுடன், அரைத்து வைத்த வெங்காயக் கலவையை சேர்க்கவும். தேவையான அளவு மிளகாய்த் தூள் போடவும்.  எண்ணை பிரியும் பதத்தில் அரைத்து வைத்துள்ள பொடிக் கலவையை சேர்க்கவும். மிகுதியுள்ள எலுமிச்சை சாறை சேர்க்கவும்.
கம கமவென்று பிங்க் நிறத்தில் வெங்காய ஊறுகாய் தயார்.

அளவுகள் கொடுக்கப்படவில்லை. ஏனென்றால் நீங்கள் சமையலுக்கு புதியவர்களில்லை.

Sufi Wisdom & அம்மாவுக்கு.

I died from minerality and became vegetable;
And from vegetativeness I died and became animal.
I died from animality and became man.
Then why fear disappearance through death?
Next time I shall die
Bringing forth wings and feathers like angels;
After that, soaring higher than angels --
What you cannot imagine, 
I shall be that.


(Reproduced from AIM December 2011)


I record with grief the passing away of Smt. Lakshmi Sabnis wife of Shreeji last night  [20-3-12]. She was always affectionate like a mother.  A very simple lady she always used to ask about the welfare of each and everyone in the family. I pray for her soul to rest in peace.


When my mother passed away  I wrote a poem for her. I reproduce the same here. It was published in 'Mangaiyar malar,' tamil magazine in June 2011.


                    அம்மாவுக்கு

ஓ அம்மா, உன்னை நான் பார்க்க ஓடோடி வந்தேன்!
நீயோ கண்ணாடிப் பெட்டிக்குள்--ஏனம்மா?
எதற்காகப் படுத்துக் கொண்டாய்!
பனிப் பெட்டிக்குள் விரைத்துப் போனாயே?
சிறு காற்று வீசினாலும் சின்னக் குழந்தையைப்
போல் சில்லென்று இருக்கிறது என்பாயே!


அது என்ன சின்னப் பெண் போல தலையிலே
பட்டாம் பூச்சி வடிவமாய் ரிப்பன்?
ஓயாமல் பேசும் உன் வாயோ அழகாக
பிறை நிலாப் போல் சில்லிட்டு......
அட அம்மா, தூங்கும் அழகியாய்
துன்பங்களிலிருந்து விடுபட்டு


மூடிக்கிடக்கும்  கண்கள்  ஒரு யோகியைப்
போல்,  உள்  நோக்கி  ஆழ்ந்து அமைதியாய்!
எங்கே போனாய் நீ உன் உடலை மட்டும் 
இங்கே விட்டு?  நாளையோ உடல் போகும்
அக்னிக்கு இரையாகும். நீரிலும், வானிலும்,
காற்றிலும் கலந்து வானப் பெரு வெளியில் 
கலந்து விடுவாய், என்னை மட்டும் தனியே விட்டு!
                         ------------------
இறைவன் மனிதனுக்கு  கடனாக அளித்த பொக்கிஷம் தாய்!
அவளை மீண்டும் தன்னிடத்தே கூட்டிக்கொள்வதில் ஆண்டவனுக்கு ஆனந்தம்.










18 Mar 2012

நட்பின் அலைகள்

ஒரு மாலைப் பொழுதில் எங்களுடைய அறிமுகம் நண்பர் வீட்டில் நிகழ்ந்தது. அற்புதமாகப் பாடுவார் என்றும், பாடும் போது அவர் வீட்டிலுள்ள குருவாயூர் அப்பன் படம் வைக்கப்படும் ஊஞ்சல் தானே ஆடும் என்றும், ராமகிருஷ்ணா மடத்தில் வளர்ந்தவர் என்றும் நண்பர் கூறினார்.

ஒல்லியான உடம்பு, நல்ல உயரம், பளிச்சென்ற முகம், பரஸ்பரம் அறிமுகம் ஆனோம். மனைவியுடனும் இரு குழந்தைகளுடனும் அரும்பாக்கத்தில் வசிப்பதாகக் கூறினார். மோட்டார் வாகனங்களுக்குத் தேவையான பாகங்கள் விற்கும் கடையில் வேலை. சொல்ப வருமானம். பஜனைகளில் ஆர்மோனியம் வாசிப்பார்.

சிறிது சிறிதாக எங்கள் நட்பு வளர்ந்தது. சனி ஞாயிற்றுக் கிழமைகளில் வருவார். பேச்சிலும் பாட்டிலும் பொழுது போகும். ஒரு நாள் மாலை அவர் வீட்டிற்குப் போனோம். சிறிய சமையலறையோடு கூடிய ஒற்றை அறை. வறுமை நிறைந்த வாழ்க்கை. ஆனால் மனம் நிறைந்த அன்பு!  போதுமென்ற மனம்  என்பதற்கு உதாரணமான வாழ்க்கை அவருடையது.

தியானம் செய்வது எப்படி என்பதை நான் அவரிடமும் கற்றுக்கொண்டேன். அகஸ்திய கீதங்களை அற்புதமாகப் பாடுவார். அவரிடம் கற்றுக் கொண்ட பாடல்களை அடிக்கடி வாய் முணுமுணுக்கும். இந்த நிலயில் அவருக்கு மூன்றாவதாகப் பையன் பிறந்தான். வறுமையே வாழ்க்கை ஆயிற்று. இந்த பக்தி, பஜனை இவற்றுக்கெல்லாம் வறுமையை போக்கும் சக்தி இல்லவே இல்லை.

உத்யோக நிமித்தம் நாங்கள் பெங்களூர் வந்தோம். ஓரிரு ஆண்டுகளில் மீண்டும் சென்னை  சென்றபோது அவர் கிறிஸ்துவராக மதம் மாறிவிட்டார் என்று கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தோம்.எப்படி மாறினார்? எப்படி முடிந்தது?

ஐம்பது வயது வரை ஒரு சனாதன தர்மத்தைப் பின் பற்றி வாழ்ந்தவரால் பைபிளும் கையுமாக எப்படி மாற முடிந்தது? மனதில் ஊறி ஊறி சதா சர்வமும் நாராயணா, கோவிந்தா, கிருஷ்ணா, முருகா என்ற நாக்கினால், இறை நாமங்களை எப்படி மறக்கமுடியும்? ''செந்தமிழ் தேன் தரும் நா, வற்றாப் பெரும் செல்வம் பொழிந்திடும் கை''என்ற பாடல் வரிகள் எல்லாம் ஆழ்மனத்திலிருந்து எவ்வாறு அழியும்!
மதங்களினால்  மனிதனின் வறுமை ஒழியுமா? நோய்கள் தீருமா? பசிப் பிணி நீங்குமா?

தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதில் மனிதனைப் போல் வல்லவன் எவனும் இல்லை!
கடவுள் மதங்களில் இல்லை!  நம்முடைய துன்பங்களுக்கு எல்லாம் நாமே காரணம் என்பதை உணர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!  சாதி சமய சழக்கை விட்டேன் அருள் சோதியைக் கண்டேனடி என்ற வள்ளல் பெருமானாரின் அருட்பா காதுகளில் ஒலிக்கிறது.

நேற்று கைபேசியில் பேசிய அவர் சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். பஜனைதான் செய்கிறோம் வாருங்கள் என்றார் அவர் மனைவி. ஆன்ம ஞானம் பெற்ற எனக்கு மதங்கள் இல்லை.






16 Mar 2012

யாராவது கேட்கட்டும்.......

வீடு என்றால் விடுதல், மேலுலகம், குடியிருக்கும் இடம் என்று அர்த்தம்.
சாதரணமாக வீடு என்ற சொல் குடியிருக்கும் இடத்தையே சுட்டிக்காட்டுகிறது.

''என்னங்க வீட்டுக்குப் போறீங்களா? ''
ஆமாம் போவணும்னுதான் ஆசை,  இன்னும்  நேரம் வரலைனு சொன்னா அடுத்தவாட்டி பார்த்தாகூட  பேசமாட்டாங்க.
என்னப்  பாக்கரவங்க  எல்லாரும்  ஒட்டுமொத்தமா கேக்கர  முக்கியமான கேள்வி இதுதாங்க!
நல்லா இருக்கீங்களா? எங்க இருக்கீங்க?
அடுத்த கேள்வி, வீட்ட என்ன பண்ணினீங்க?
வீட்ட என்ன சமச்சா சாப்படமுடியும்? சும்மாதான் பூட்டி வெச்சிருக்கேன்.
இந்தக் காலத்துல எல்லாரும் தனிய இருக்கதான் பிரியப் படராங்க. செக்யூரிட்டி இருக்குல்ல. நீங்க பாட்டுக்கு இருக்கலாமே?
இருக்கலாம் தான். எனக்கு தனியா இருந்து பழக்கமில்லேங்க!
சரிதான் வாடகைக்கு குடுங்கம்மா! வாடகை பணத்த நல்லா செலவு செஞ்சு நல்லா உடம்ப பார்த்துக்குங்க- இது பூக்காரி அமலா!
சாமானங்க சேர்த்து வாடகைக்கு விட்டா, கூட வாடகை கிடைக்கும் மேடம்! [furnished quarters]
நீங்க வீட்டை விக்கப் போறதா கேள்விப் பட்டேனே! விக்கப் போறீங்களா?
Paying guest accomadation  மாதிரி  செய்யலாம். சொல்லுங்க, நம்ம பசங்க இருக்காங்க!
சும்மா எதுக்கு மாதா மாதம் maintenance வேற குடுக்கரீங்க, தனி ஆள் ஒருத்தர் கேட்கறார்!

பார்த்தீங்களா? வீடு என்னுடையது. எல்லோருக்கும் என் வீட்டின் மீது என்ன அக்கரை என்று!
அந்த  வீட்டை நாங்கள் எப்படி வாங்கினோம் என்று யாருக்காவது தெரியுமா? ஏற்கெனவே இருந்த வீட்டை விற்று, பேங் லோன் வாங்கி, அதை திருப்பிக் கொடுக்க சிக்கனமாக செலவு செய்து, கஞ்சப்பிசினாரி என்று எல்லாரிடமும் கெட்டபேர் வாங்கிய கதை இரண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும். என்னுடைய கணவருக்கு பூர்வீக சொத்து எதுவும் கிடையாது. எங்களுடைய உழைப்பில், தியாகத்தில் வாங்கிய வீடு அது.

உங்களுக்கு என்ன சொந்த வீடு இருக்கிறது!! என்று வெளிப்படையாகவே தங்கள் மனதை திறந்து காட்டியவர்கள் பலர். நாங்கள் யார் பொருள் மேலும் ஆசை வைக்கவில்லை. கஷ்டங்கள் பலவற்றுக்கும் இடையே கிடைத்தது அந்த வீடு. நாங்கள் இருவரும் சேர்ந்து யோக வாழ்க்கை வாழ்ந்த அந்த வீட்டைப் பற்றி எல்லோருக்கும் என்ன அக்கரை பாருங்கள்!

சமீபத்தில் ஒருவர் கேட்டார், ''உங்க வீட்டில யார் இருக்காங்க?''
நான் சொன்னேன், எங்க வீட்டுக்காரர் இருக்கார், என்று.

என்னை ஒரு மாதிரி மேலயும், கீழயும் பார்த்து விட்டு பேசாமல் நடையைக் கட்டினார்.
அவருக்குத் தெரியும் என் கணவர் இல்லை என்று! ம் ம் யாராவது கேட்கட்டும்!................








14 Mar 2012

அஸ்ஸாமியக் கவிதை- மொழிபெயர்ப்பு

தூண்டுதல்

அந்தி மாலைப் பொழுதில்
வயல் வெளிகளுக்கு நடுவே
அவன் செல்கின்றான்.
சூரியனின் ஒளி அவன்
சிரஸை வருடுகிறது.
இரு புறமும் கூடைகள்
தொங்கும் மூங்கில் அவன்
தோள்களில்!
இலையுதிர் காலச் சூரியன்
அவன் பின்னால் மறைந்தது.
கூரை வேய்ந்த வீடுகளுடைய
சிறு கிராமம். கல்லும்
முள்ளும் நிறைந்த பாதை!
இரு புறமும் புதர்கள்.
பறவைகளின் இனிய இசை!
அவன் அவ்விடம் விட்டுச்
செல்கின்றான்! யாருக்குத்
தெரியும் இந்த ஜன்மத்தில்
அவன் வருவானா என்று!

This is my translation of one of the poems from 
The Three Score Assamese Poems -compiled and translated by D N  Bezboruah
National Book Trust, India.

12 Mar 2012

Flowers and Benedictions -THE MOTHER

O Lord...Thou hast put
   a magical power in these flowers:
they seem to speak of
   Thy sole Presence;
they bring with them
    the smile of the Divine.



''Lo! here are flowers and benedictions! here is the smile of divine Love!
It is without preferences and without repulsions. It streams out towards
all in a generous flow and never takes back its marvellous gifts!''

Her arms outstretched in a gesture of ecstasy, the Eternal Mother pours
upon the world the unceasing dew of Her purest love.

Flowers manifest the Divine Love by offering of their beauty and fragrance in a loving
efflorescence.



Meditation of the Mother on April 1,  1917 [in Japan

Thou hast shown to my mute and expectant soul all the splendour of fairy landscapes:
trees at festival and lonely paths that seem to scale the sky....
 
Once more, everywhere I see cherry trees; Thou hast put a magical power in these flowers:
they seem to speak of  Thy sole Presence; they bring with them the smile of the Divine.

My body is at rest and my soul blossoms in light : What kind of a charm hast Thou put into these trees in flower?

 O   Japan, it is thy festive adorning, expression of thy goodwill, it is thy purest offering, the pledge
of thy fidelity; it is thy way of saying that thou dost mirror the sky.

BE LIKE A FLOWER. OPEN, FRANK,GENEROUS & KIND.

RADIATE JOY AND BEAUTY.










8 Mar 2012

காலம் மாறிப் போச்சு

காலையில் எழுந்து காப்பி போட்டு,
சமையல் செய்தது அந்தக்காலம்.

காலையில் எழுந்து 'bye bye' சொல்லி
Cab ல் போவது இந்தக்காலம்.

எட்டுக் கல்லு பேசரி கேட்டது அந்தக்காலம்
எடுப்பாய் 'ப்ளாட்டினம்,' 'நெக்லஸ் வாங்குவது  இந்தக்காலம்.

பட்டுப் புடவைக்கு கண்ணைக் கசக்கியது அந்தக்காலம்
ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட், டாப்ஸ் வாங்குவது இந்தக் காலம்.

குஞ்சலம் வைத்து, பூச்சடை பின்னுவார் அந்தக்காலம்
மருதாணி சாயமும், ' boy' கட்டும்  இந்தக்காலம்.

துணையில்லாமல் எங்கும் போகார் அந்தக்காலம்
துணிச்சலாக வானில் பறப்பது இந்தக்காலம்.

வணக்கம், நமஸ்தே, நலமா என்பது அந்தக்காலம்
ஹை, ஹாய், ஹலோ,  ஸீ யூ  என்பது இந்தக்காலம்.

அந்தக்காலம் இறந்த காலம் ஆனாலும் இன்னும்
இருக்கும் காலம், மாறும் மாறும் இந்தக் காலம்.

மாறுகின்ற காலத்தின் கட்டாயத்தால்  பெண்ணின் செயல்கள் மாறலாம். பெண்மை என்றும் மாறாது.
பெண்கள் தின வாழ்த்துக்கள்.