21 Mar 2012

Pink Delight from Kamala's kitchen

அது என்ன வெங்காயக் கலர்ல ஆனந்தம்? வெங்காயத்தை உரித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது என்ற பாட்டைக் கேட்டிருப்பீங்க இல்லையா? அதனால் தான் எல்லாருக்கும் பிடித்தது வெங்காயம். வெய்யில் காலம் வந்து விட்டது. நம்மை சூட்டிலே காய வைக்கிறது. கொஞ்சம் வெங்காயத்தையும் காய வைக்கலாமே!

1.  இரண்டு வெங்காயத்தை வட்ட வட்டமாக நறுக்குங்கள்.அதன் மேல் எலுமிச்சம் பழத்தைப் பிழியுங்கள். சிறிது உப்பு சேருங்கள். பிடித்தவர்கள் ஒரு பச்சை மிளகாயை மெல்லியதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். அரை மணி நேரத்தில் பயன் படுத்தலாம். வெய்யிலுக்கு இதமானது. அப்படியென்றால் வெயில் சாப்பிடுமா என்காதீர்கள். சாம்பார் சாதத்திற்கு,  இதய நிறத்தில் இதமான  துணை இது.




2. அடுத்தது வெங்காயத் தொக்கு. தேவையான அளவு வெங்காயத்தை தோல் நீக்கிப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். உப்பு சேர்த்து எலுமிச்சம் பழச் சாறை அதில் சேருங்கள்.  ஒரு நாள் முழுதும் ஊற வையுங்கள். மறு நாள்  வெங்காயத்தை பிழிந்து எடுத்து ஒரு தட்டில் போட்டு வெயிலில் காய வையுங்கள்.
காய்ந்த வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு ஒரே ஒரு சுற்று ஒன்று சேர்வதற்காக!

வெறும் வாணலியில் இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை வறுத்துக் கொண்டு, விரலி மஞ்சள் கிழங்கு ஒன்றைத் தட்டி வாணலியில் சூடு படுத்திக் கொள்ளுங்கள். அதிலேயே ஒரு ஸ்பூன் கடுகு சேர்க்கவும்.இவற்றை மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.

வாணலியில் இதயத்தை[நல்லெண்ணை] விட்டு கடுகு வெடித்தவுடன், அரைத்து வைத்த வெங்காயக் கலவையை சேர்க்கவும். தேவையான அளவு மிளகாய்த் தூள் போடவும்.  எண்ணை பிரியும் பதத்தில் அரைத்து வைத்துள்ள பொடிக் கலவையை சேர்க்கவும். மிகுதியுள்ள எலுமிச்சை சாறை சேர்க்கவும்.
கம கமவென்று பிங்க் நிறத்தில் வெங்காய ஊறுகாய் தயார்.

அளவுகள் கொடுக்கப்படவில்லை. ஏனென்றால் நீங்கள் சமையலுக்கு புதியவர்களில்லை.

No comments:

Post a Comment