29 Feb 2012

அமைதியின் மடியில் 1

துன்பங்கள் வரும் போது தனித்து வருவதில்லை கூட்டமாகதான் வரும் என்று கேள்விப்படுகிரோம். பலருடைய வாழ்விலும் நேருவதுதான் இது. 1977 ஆம் ஆண்டு  உடல்நலக் குறைவு, என் தந்தையாரின் மரணம் என மனம் நொந்திருந்த நேரம்!

இத்தனைக்கும் நடுவில் இரண்டாம் வகுப்பிலும், ஐந்தாம் வகுப்பிலும் படிக்கின்ற இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு எனக்கு ஒரு ஆசை! பிரமாதமான, வானத்துச் சந்திரனை பூமிக்குக் கொண்டுவரவேண்டும் என்ற ஆசையில்லை. மேற்படிப்பு, எம். ஏ., தமிழ்  படிக்கவேண்டும் என்ற விருப்பம்  அது.  பி. ஏ ., பொருளாதாரம் பாஸ் செய்திருந்த எனக்கு தமிழ் மொழி மேல் ஏற்பட்ட காதல் காரணமாக ஏற்பட்ட ஆசைதான் அது.  ஏற்கெனவே பள்ளி ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருந்தேன். புதிதாக  ஆரம்பிக்கப்பட்ட பள்ளி ஆகவே மேல்கொண்டு பதவி உயர்வு, சம்பள உயர்வுகளுக்கும் உதவிக் கரம் நீட்டும் என தலைமை ஆசிரியையும் தூண்டினார்.

ஒரு மருமகளாய், மனைவியாய், தாயாய், ஆசிரியையாய் நான்கு அவதாரங்கள்  எடுத்துக் கொண்டு ஜெட் வேகத்தில் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. மெதுவாக என் கணவரிடம் என் விருப்பத்தை தெரிவிக்க அவருக்கு ஒரே சந்தோஷம். எப்படி என்று விவாதித்தோம். தபால் படிப்பு வேண்டாம் என்று முடிவு செய்து மாலைக் கல்லூரியில் படிக்க முடியுமா என்று ஆராய்ந்தோம்.

நாங்கள் தீர்மானித்தால் போதுமா?  என் மாமியாரிடம் அனுமதி கேட்ட போது முழு ஒத்துழைப்பு தருவதாக சொன்னதால் மாலைக் கல்லூரியில் சேர்வது எனத் தீர்மானம் செய்தேன். மாலைக் கல்லூரிகளின் பட்டியலைப் பார்வை இட்டபோது பக்கத்தில் இருப்பது பச்சையப்பன் கல்லூரிதான் எனத் தெரிந்தது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அடிக்கடி தர்ணா செய்வார்கள். பெயர் கேட்டாலே கொஞ்சம் பயம் தான்.

கல்லூரி நேரம் மாலை ஆறு மணி முதல் எட்டு மணிவரை. விண்ணப்ப படிவம் வாங்கி வரச் சென்ற என் கணவர் இன்னொறு அதிர்ச்சியான செய்தியைத் தெரிவித்தார். கல்லூரிக்குள் நுழைந்த நேரம் ஆங்கிலப் பேராசிரியர் திரு. சுப்பையனைப் பார்த்தேனா, நீங்களும் சேருங்கன்னு சொன்னாரா, நானும் ஆங்கில வகுப்பில் சேரப்போகிறேன் என்பதுதான் அது. சரிதான் இரண்டு பேரும் காலை எட்டு மணி முதல் இரவு ஒன்பது வரை  வெளியில் இருந்தால் யார் குழந்தைகளையும்,  வீட்டு வேலைகளையும் பார்ப்பது?

சமாளித்துக் கொள்ளலாம் என்று ஒரு தைரியம்! அப்போது எனக்கு 31 வயது.என்னவருக்கு 35. வேடிக்கையாக இருக்கிறது, இல்லையா? மாலைக் கல்லூரி மாணவர்களாக நாங்கள் இருவரும்! அவர் ஆங்கில இலக்கியம், நான் தமிழ்.  இரண்டு ஆண்டுகள் நான்கு செமெஸ்டர்கள்.

ஆங்கிலப் பேராசிரியர்  ஶ்ரீ அரவிந்தர், அன்னையின் பக்தர். அடிக்கடி பாண்டிச்சேரி சென்று வருபவர். என்னுடைய  உடல் நிலைக் கோளாறு பற்றி அவரிடம் என் கணவர் சொல்ல, அன்னையின் சமாதிக்குச் சென்று வேண்டிக்கொள்ளுங்கள் எல்லாம் சரியாகும் என்றார் அவர். அது வரையிலும் எங்களுக்கு அன்னை அரவிந்தரைப் பற்றித் தெரியாது.

ஒரு ஞாயிறன்று விடியற்காலை பாண்டிச்சேரியை அடைந்தோம். முதலில் ஆசிரமத்திற்குச்சென்றோம். தாமிர நிறத்தில் விதைகள் அடங்கிய காய்களுடன், மஞ்சள் மலர்களைக் கொத்துக் கொத்தாய் சூடிக்கொண்டு  காட்சியளித்த மரத்தின் அடியில்  அன்னை, அரவிந்தரின் சமாதி. சமாதியின் மேல் அழகிய மலர்களால் அலங்காரம். அந்த மலர்களின் மீது மொய்க்கும் வண்டினம். மலர்களிலிருந்து கண்ணுக்குத் தெரியாமல் நாசியை நிரப்பும்  நறுமணம். மென்மையான ஊதுவத்திகளின்  வாசனையைச் சுமந்து கொண்டு வீசும் தென்றல் காற்று. இவற்றின் ஊடே எங்கும் கிடைக்காத, அமைதியின் அழகு!
சாந்தத்தைக் கைகளில் சுமந்து கொண்டு, உணருகின்ற உள்ளம் உடையவருக்கு மட்டுமே கிடைக்கும் ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒளி அலைகள்! எந்த வழிபாட்டிலும் கிடைக்காத  பேரானந்தம்.
எந்தக் கோவிலிலும் ஏற்படாத இதயத்தை வருடும் சிலிர்ப்பு.

அந்த நாளில், அந்த நிமிடத்தில் அன்னையின் தங்கச்சங்கிலியில் கட்டுண்டோம். ஒரு முறை அன்னையின் அன்பு வட்டத்துள் நுழைந்துவிட்டால் எல்லாம் அவள் பொறுப்பு! அன்றிலிருந்து இன்றுவரை அன்னயின் பாதுகாப்பில்,  எது நடந்தாலும் அவள் செயல் என்று வாழ்வதால் எல்லாவற்ரையும் தாங்கிக் கொள்ள முடிகிறது.

கடந்த முப்பத்தைந்து வருடங்களாக அரவிந்த ஆசிரமம் எங்கள் தாய் வீடு. பாண்டிச்சேரிக்கு நேரில் போக முடியாவிட்டாலும் வருந்துவதில்லை. ஏன் தெரியுமா? அரவிந்த ஆசிரமும், சமாதியும் இதயகமலத்தில் கோவில் கொண்டிருப்பதால்தான் அதே ஆன்மிக அமைதி! ஆனந்தம். அமைதியின் மடியில் தலைசாய்த்து அழுவதிலே ஒரு சுகம். எங்கும், எப்போதும் அவள் இரு கரம் நீட்டி அணைக்கக் காத்திருக்கிறாள் என்ற நம்பிக்கை! அவதார புருஷர் அரவிந்தரையும், அதிதியாம் அன்னயையும், இறைவனின் தெய்வீகப்பேரொளி புவியில் இறங்கிய இந்த நாளில் வணங்குகிறேன்.

என் உடல் உபாதையும் தீர்ந்தது. எங்களுடைய கல்லூரிப் படிப்பும் முடிந்தது .இடையில் எத்தனையோ தடங்கல்கள்! எதிர் நீச்சல் போடுவதுதான்  வாழ்க்கைக்கு சுவை சேர்க்கும் இல்லையா? இன்றைக்கு நினைத்துப் பார்த்தால் மலைப்பாக, அட, எப்படி எல்லாவற்றையும் சமாளித்தோம் என்று அதிசயமாக இருக்கிறது. 

















28 Feb 2012

The Golden Light by Sri Aurobindo

















Thy golden Light came down into my brain
  And the grey rooms of mind sun-touched became
A bright reply to Wisdom's occult plane,
  A calm illumination and a flame.

Thy golden Light came down into my throat
   And all my speech is now a tune divine,
A paean song of Thee my single note;
   My words are drunk with the Immortal's wine.

Thy golden Light came down into my heart
   Smiting my life with Thy eternity;
Now has it grown a temple where Thou art
   And all its passions point towards only Thee.

Thy golden Light came down into my feet;
My earth is now Thy play field and Thy seat.
                         ------------------

Let the Truth be your master and your guide.
        We aspire for the Truth and its triumph in our being and our activities.
Let the aspiration for the Truth be the dynamism of our efforts.
         O Truth! We want to be guided by Thee. May Thy reign come upon earth.
                                                                           
                                                               -THE MOTHER

26 Feb 2012

காத்தாடி



என்னடா பண்றே, பேப்பரை கிழிச்சு!
ஓ, அப்பா இவ்வளவு சீக்கிரம்  வருவார்னு தெரிஞ்சிருந்தா சீக்கிரமா வேலைய  முடிச்சிருக்கலாம்! பேப்பர், கத்தரிக்கோல், மைதாப் பசை, நூல்கண்டு எல்லாம் என்னைப் பார்த்து சிரிக்கிறது.
என்ன காத்து வீணாப்போவுதுன்னு காத்தாடி செய்யரியா? சரி சரி, போ!
பத்து  நிமிஷத்தில் அப்பா வந்தார் கையிலே புதிதாக கீறி எடுத்த தென்னங்குச்சி. முக்கோணமா பேப்பரை கிழிச்சு ஒட்டி, நடுவிலே தென்னங்குச்சி, பிறை நிலா கீற்று மாதிரி! அதற்கு ஒரு வால்! ஆயிற்று நூலை காத்தாடியோட சேத்துக் கட்டி, தோழர்கள் புடைசூழ மைதானத்துக்கு வந்தோமா!
கூடவே அப்பா! நீ நூல இழு, நான் காத்தாடிய மேல விடறேன்.
நூல நான் இழுக்க அப்பா காத்தாடிய மேல தூக்க, காத்து ஒரு வீசு வீசி காத்தாடிய  மே.........ல தூக்க ஒரே கொண்டாட்டம்.
காத்தாடி விடறதுலதான் எவ்வளவு சந்தோஷம். நீலவானத்தில கண்ணுக்குத் தெரியாத நூலில பறக்கும் 
காத்தாடியே மேல பறக்குற சுகம் எப்படி இருக்குன்னு சொல்லேன்.
வானத்திலே காத்தாடிய பார்த்தா அப்பா ஞாபகம் வருது!

Prayers and Meditations - February 25-26, 1914

He who wants to serve Thee  worthily should not be attached  to anything,  not even to those  activities which enable him to commune more consciously with Thee....But if as a result of the totality of circumstances, material things still take a greater place in life  than usual,  one must know how not to become absorbed by them,  how to keep in one's inmost heart the clear vision of  Thy presence and live constantly in that serene peace which nothing can disturb....

Oh, to do everything seeing only Thee everywhere and thus soar above the act that has been carried out, without letting any chain that holds us prisoners to the earth burden our flight....

O Lord, grant that the offering I make to Thee of my being may be integral and effective.

With a respectful and loving devotion I bow down before Thee, O ineffable Essence, inconceivable Reality, Nameless One.       ----  The Mother


24 Feb 2012

ஒரே கல்லில்......


இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பல வகுப்புகளுக்கும் போய்க்கொண்டிருந்த கால கட்டம். வகுப்பு பத்தரை மணிக்கு என்றால் பத்து மணிக்கு அழைத்துச் செல்ல வேன் வந்துவிடும். பள்ளிக்கூட வாசலில் நிற்கும் வேனை அடைவதற்கு எங்கள் வீட்டிலிருந்து பத்து நிமிடம் நடக்கவேண்டும். அதாவது ஒன்பது முப்பதுக்கு கதவுகளைப் பூட்ட ஆரம்பித்தால்தான்  நிதானமாக நடந்து போக முடியும். அப்படி என்றால் ஒன்பது மணிக்குள் எல்லா வேலைகளையும் முடிக்க வேண்டும்.

காலை ஆறு மணிக்கு எழுந்தால் செய்தித்தாளைப் பார்த்துக் கொண்டே காப்பி குடித்து,  குளித்து, சமையல் செய்து, துணிகளை வாஷிங் மிஷினில் போட்டு எடுத்து, காயப்போட்டு, காலை உணவுசாப்பிட்டு, இடையே வரும் உதவியாளரிடம் வேலை வாங்கி, டிரெஸ் செய்து கொண்டு கிளம்பவேண்டும் . எதையுமே மாற்ற முடியாது! செய்தி படிக்காவிட்டால் சூடு ஆறிவிடும். குளிக்காமல் சமையல் செய்து பழக்கம் இல்லை.  குளித்து துணிதோய்த்துக் காயப்போடாவிட்டால் தோஷம்! எல்லாம் சரி, எப்படியும் நாம் தானே செய்யவேண்டும்?

எல்லாம் செய்து விடலாம். இந்த சமையலின் உப்பு, புளி, காரம்தான் காலை வாரிவிடும்.  என்னதான் கவனமாக இருந்தாலும் சரிவருவதில்லை. என்ன செய்யலாம் என யோசித்ததில் ரெடிமேட் புளிப் பசை வாங்கி உபயோகித்தேன். நம்முடைய  நாக்குக்குத்தான்  எத்தனை  சக்தி?  உடனே ஆட்சேபணை வந்து விட்டது.  இதில் என்ன வாசனை?  நன்றாக இல்லை என்று!

இந்த ரெடி மிக்ஸ்களின் குறிப்புகளையெல்லாம் பார்த்தேன். சரிதான் ஒரு முறை செய்துதான் பார்க்கலாமே என்று  அளவுகளை எழுதிக்கொண்டேன். புளி கால் கிலோ? வீட்டிலோ சாம்பார் பொடி உள்ளது.  புளியை குக்கரில் வேகவைத்து, மிக்ஸியில் அரைத்தேன்.  நான் ஸ்டிக் கடாயில் சற்று அதிகமாக எண்ணை விட்டு கடுகு, பெருங்காயம் வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து, கடுகு வெடித்ததும் அரைத்த புளியைப் போட்டு  உப்பு சேர்த்துக் கிளறி, சற்று கெட்டியானதும் சாம்பார் பொடி சேர்த்துக் கிளறி  ஒட்டாமல் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டேன். அளவு என்ன?

தினப்படி சமையலுக்கு எடுத்துக்கொள்ளும் புளி அளவில் பத்து நாட்களுக்கு வேண்டியது எடுத்துக் கொள்ளவும்..அதே போல் உப்பு,சாம்பார்பொடி, தாளிக்க எண்ணை, கடுகு, பெருங்காயம்,வெந்தயம், கருவேப்பிலை. புளிக்காய்ச்சல் பதம் வரவேண்டும் என்பதால் எண்ணை கொஞ்சம் அதிகம் வேண்டும். இந்த சாம்பார் பேஸ்ட் கண்டிப்பாக கெட்டுப்போகாது.

ஆறவிட்டு பாட்டிலில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டால் தேவையான அளவு வத்தல் குழம்பாகவோ, பருப்புக் குழம்பாகவோ, சாம்பாராகவோ நிமிடத்தில் செய்துவிடலாம். பருப்புடன் காய் சேர்த்து குக்கரில் வைத்துவிட்டால் இந்த பேஸ்ட் வேண்டிய அளவு சேர்த்தால் போதும். குழம்பு ரெடி.
வேண்டிய காய்களை வதக்கிக்கொண்டு இந்தக் கூழ் சேர்த்தால் வற்றல் குழம்பு, ஒரே சுவை போரா? சிறிது தேங்காயுடன்  தனியாவை வறுத்து அரைத்து விட்டால் அரைத்த சாம்பார்.  முந்திரிப்பருப்பு வறுத்துக் கொண்டு, கூழ் சேர்த்து,வெந்தய, தனியாப்பொடி தூவினால் புளியோதரை.

நேரமிருந்தால் இதே போல் ரசக்கூழ் செய்யலாம். சாம்பார்ப் பொடிக்கு பதில் ரசப் பொடி சேர்க்கவேண்டும். கஷ்டப்படாமல் டக்கென்று பூண்டு ரசம், புதினா ரசம், மைசூர் ரசம், மிளகு ரசம் என எது வேண்டுமோ அது .                     

இந்த புளிக்கூழ்களின் உதவியால் எல்லா வகுப்புகளுக்கும்  போகமுடிந்தது. இரண்டு ஆண்டுகள், தீரத்தீர ஒரு நாள் வேலைதான். வேலைக்குப் போகின்றவர்களுக்கு வரப்பிரசாதம். திடீர் விருந்தினர் வந்தால் கை கொடுக்கும் தெய்வம்!  என்ன, ஒரு நாள் கஷ்டப்படவேண்டும். ஒரு மாதம் நிம்மதியாக இருக்கலாம். செய்து பாருங்களேன்!


22 Feb 2012

அசைவு

எங்கோ ஓர் உயிர் அசைந்தது. வரும் வழிதேடிச் சுழன்றது. சுற்றிலும் பேரலைகள் மேலும், கீழுமாய்! முன்னும் பின்னுமாக,  தள்ளுகின்ற வேகம், இப்படி, அப்படியென எங்கும் உந்துதல்கள். திடீரென ஓர் அமைதி. இல்லை, இல்லை இதோ மீண்டும் இன்னும் வேகமாய்! ஒரே மூச்சாய், இதோ இருண்ட வழியில் ஒரு புதுப் பயணம் வெளிச்சத்தை நோக்கி!

இத்தனை சுழற்சியிலும் பாதிக்கப்படாமல் வழிதேடி வந்து விழுந்தது அது. உயிர்ச் சக்தியோடு இணந்தது. துயிலில் ஆழ்ந்தது. வெற்றியுடன் வெளியே வீழ்ந்ததை எண்ணி அவ்வப்போது சிரித்தது. வரப்போகும்  வாழ்வை அறிந்து அவ்வப்போது அழுதது.

காலம் சென்றது. உடலும், மனமும், அறிவும் வளர்ந்தது. கற்றது, பெற்றது. வாழ்ந்தது வயதில் முதிர்ந்தது.
பிணியில் வீழ்ந்தது. மீண்டும் பேரலைகளால் அலைக்கழிக்கப்பெற்றது. ஒளியைத் தேடித் தேடி வில்லிலிருந்து விடுபட்ட அம்பினைப் போல் வேகமாக வந்த இடம் நோக்கிப் பறந்தது.

வந்தது எது? போனது எது? வந்ததுதான் போனது என்றால் வாழ்ந்தது எது?
வாழ்ந்ததுதான் போனதென்றால் கற்றதும் பெற்றதும்  போனதெங்கே?
அசைந்து வந்தது, அசையாமல் போனதெங்கே அறிவீரா? அறிவீரா?

16 Feb 2012

முத்துக் குழம்பும், சவரன் துவையலும்

நகைச்சுவை வாழ்க்கையின் சாரம் என்று சொல்வார்கள். நகை என்றால் சிரிப்பு, மகிழ்ச்சி.  நகை என்றால் சிரித்தல் செய்.  ஒரு பெண்ணை வாய் நிறைய சிரிக்க வைப்பதால் தான் ஆபரணங்களுக்கு நகை என்று பெயர் வைத்தார்கள் போல! தினந்தோறும் செய்கின்ற சமையலிலும், சாப்பாட்டிலும், இல்லாத நகைச்சுவையா?

தேர்வு எழுதுகிற  மாணவனின் தேர்வுத் தாளை ஒரே ஒரு ஆசிரியர்தான் திருத்துவார். ஆனால் ஒருத்தர் எழுதி பலரும் மார்க் போடுகிற பரிட்சை இந்த சமையல்தாங்க.

என்னம்மா இவ்வளவு உப்பு? அதிக உப்பு சேர்த்தால் ரத்த அழுத்தம் எகிறிடும், இது கணவர்.
உப்பே இல்லாம இது என்ன சப்பென்று? எவன் சாப்பிடுவான், இது பிள்ளை.

எண்ணை அதிகமானால் கொலஸ்ட்ரால், கம்மியானால்  பேஸ்ட் உப்புமா.
காரம் அதிகமானால் அல்சர். இல்லையென்றால் சப் சப்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் முடிவே இல்லையா?

நாங்கள் அடிக்கடி பாண்டிச்சேரி செல்வோம். கடற்கரையில் ஒரு உணவகம். ஒரு நாள் மாலை ஏதாவது சாப்பிடலாம் என்று உள்ளே போனோம். தயிர் வடை ஆர்டர் செய்தோம். பத்து நிமிடத்திற்குப் பின் சுடச்சுடத் தயிர் வடை வந்தது. சூடான வடை மேல் தயிர் ஒரு கரண்டி!
என்ன சார், அப்பிடி பார்க்கறீங்க? தயிர்  வடைதானே கேட்டீங்க?

மகாத்மா காந்தி சாலையில் புகழ் பெற்ற முருகப் பெருமானின் பெயர் உடைய ஹோட்டல்:-
"என்ன வேணும்?
இரண்டு மசால் தோசை.
என்னப்பா, தோசை இவ்வளவு ஆறிப்போயிருக்கு?
ஏ.ஸி.ரூம்ல எப்படி சார் தோசை சூடாயிருக்கும்?"

சரிதான் இன்னிக்கு பார்சல் வாங்கிட்டு வந்திடுங்க.
 வெங்காய தோசை வாங்கி வந்தார்.
சரியான பசி. பார்சலைப் பிரித்தேன்.
தோசை மேலே நறுக்கிய  வெங்காயம் தூவப்பட்டிருக்கு!
பசியை மீறி சிரிப்போ சிரிப்பு. இவையெல்லாம் பாண்டிச்சேரி அனுபவங்கள்தான்.

இன்னிக்கு என்ன டிபன்?
புது டிபன்.
எந்த ரெசிப்பியை பார்த்து செஞ்சே?........இதோ பாரும்மா, புது ரெசிப்பியெல்லாம் செஞ்சு என்னை சோதிக்காதே! வேறே ஏதாவது குடு.
இருங்க, அவல் தோசை, மெத்து மெத்துன்னு இருக்கும்னு போட்டிருந்துதேன்னு கஷ்டப்பட்டு அரைச்சு வெச்சேன். ரெண்டே ரெண்டு.
சரி சரி விடமாட்டியே!
அடுப்பின் மேலே கல்.
கல்லின் மேலே அரைத்தமாவு.
ஓ, ரெண்டு ஸ்பூன் எண்ணை! கல்லோடுதான் உறவாடுவேன், வீணையும் நாதமும் போல என்னைப் பிரிக்கமுடியாது  என்று  கல்லோடு  ஒட்டிக்கொண்டு  தோசை  அழிச் சாட்டியம் பண்ண, பழைய புளித்தமாவு தோசை வேறொரு கல்லில்!

பெண் பார்க்க வந்தவர்கள்.
உங்க பொண்ணுக்கு சமைக்கத் தெரியுமா?
ம்ம், நல்லா வென்னீர் வைப்பா! இன்ஸ்டண்ட் காப்பி போடுவா, எம்.டீ.ஆர் பாக்கெட்டை மைக்ரோ ஓவனிலே வைச்சு சமைச்சுடுவா. என்ன சார், இந்தக்காலத்திலே சமையல்?

எப்பப்பார்த்தாலும் ஒரே டேஸ்டில, சாம்பார், ரசம் இதைத் தவிர எதுவும் தெரியாதா?
எங்க அம்மா எப்படி சமைப்பாங்க தெரியுமா? முத்துக் குழம்பும், தங்கப்பூ ரசமும், சவரன்
துவையலும்!
அடடா, நீங்க என்ன மகாராஜா பரம்பரையா?
என்ன ரகசியமோன்னு பார்த்தேனா? வற்றல் குழம்பிலே மணத்தக்காளி வற்றலை நெய்யில் பொரித்துப் போட்டார்களே, அதுதான் முத்துக்குழம்பு!
பொன் போலக் காய்ந்த வேப்பம் பூவை வறுத்துப் போட்டார், பூ ரசம்  ஆயிற்றா?
துவரம் பருப்பை சிவக்க வறுத்து, மிளகு சேர்த்து அரைத்தால் சவரன் துவையல்!
அட ஜம்பமே, என்று சிரித்தாலும் என்ன ஒரு கற்பனை பாருங்கள்!

முத்துக் குழம்பும், பூ ரசமும், சவரன் துவையலும் பெஸ்ட் காம்பினேஷன் சமையல்.
செய்து பாருங்களேன்!
                                      -----------------------------------------







15 Feb 2012

நினைவுகள்--வருவாயா?

பூங்காவின்  வழித்தடங்கள்,  கால்  பதித்த  தடயங்கள்,
கைகோர்த்து  நடந்து  சென்ற  பாதைகளின்  ஓரத்தில்
மணம் பரப்பும் செண்பகங்கள்!  மலர்ந்து சிரிக்கின்ற
வண்ணப்  பூக்கள், காற்றில் அசைந்தாடி  வரவேற்கும்
மரக்கிளைகள், கள்ளமில்லா மென் சிரிப்பால் உள்ளம்
கவரும் சின்னக்  குழந்தைகள், உன்னைத்  தேடி, என்
முகம்  நோக்கி  மவுனமாய்  வினா எழுப்பும்? ஆயின்
நானும் உன்னைத் தேடுகின்ற ரகசியத்தை நான்
வெளியே சொல்வதில்லை. சாலையோர மரமாய்,
செண்பகத்தின் பூவாய்,வீசுகின்ற காற்றாய்,
நிலவொளியின் தண்கதிராய், கதிரவனின் பொற்
கரமாய், வானிலும், நிலவிலும், மண்ணிலும்
உன்னையெங்கும் தேடுகின்றேன்! என்றாவது
உன்னைக் காண்பேனா? நீ வருவாயோ மாட்டாயோ,
நான் வருவேன் உன்னிடத்தில் நிச்சயமாய்!







சொந்தம்

உன்  வீடு   மட்டுமே  உனக்குச்  சொந்தம்!
அதுவும்  குறுகிய காலம்.
சுயமாய்ச் சிந்தித்து,
விரும்பியதை  விரும்பியவாறு
விருப்பம் போல் வசிக்கும் இடம்......இரண்டு,
இந்த  உடல் -உன்  வீடு!
அற்புதமாம் - உன்  மனம்.
பறக்காமல் பறக்கும்  பறவை!
மண்ணிலோ  வானிலோ
அண்ட  சராசரங்களிலோ - சிறகடித்து
உயர உயர-- சுதந்திரமாய்
எங்கேயும் , எப்போது  வேண்டுமானாலும்
எந்நேரத்திலும்  சிறகடித்து................
சிறைப் படுத்தமுடியாத
அற்புதப் பறவை!  என்னுடைய ஒரே சொந்தம்!

14 Feb 2012

Facts about Oats - Kamala's kitchen

Oats is part and parcel of many of our kitchen storage. It is very easy to cook, above all complaints and can be swallowed fast. It is really a gift to a housewife; less work.

Oats are generally considered healthful. The discovery of the healthy cholesterol lowering properties has led to wider appreciation of oats as human food.

What is oats? It is a species of cereal grain grown for its seed. While oats are suitable for human consumption as oatmeal and rolled oats, one of the common uses of it is as a livestock feed. Oats make up a part of the daily diet of horses, and are regularly fed to cattle as well. Oats are also used in some brands of Dog food and chicken feed.  Oat seeds are commonly marketed as cat grass to cat enthusiasts.

Who should eat oats? How much do you have to eat?
Only those having cholesterol should eat oats. Oat bran, lowers L D L cholesterol. The highest doses needed to treat cholesterol is only 60 grams. If you have high levels of cholesterol, above 230, a bowl of oat bran can help you. If your level is low, you will not see any beneficial results.

Oats lack many of the prolamines found in wheat. But it contains avenin. Avenin is a prolamine that is toxic to the intestinal mucosa. It can trigger a reaction in coeliacs.

There are 80 calories in 1 cup of cooked oat bran cereal without fat being added.

I am not against oats and oat preparations. Since I found out healthy people suffering from stomach problems all on a sudden after taking oats,  I found out these facts from the websites and wanted to share with you.
I see almost all the magazines competing with each other with oats preparations like oats uppuma, pongal, vadai, adai, dosa etc.

Kindly take oats only after consulting a dietician.




9 Feb 2012

கஞ்சி (kanji) - Kamala's kitchen

காலை 9 மணி. தொலைபேசி அலற,'' ஹலோ, யார் பேசரது?''
நான்தான் சரோஜா, குட் மார்னிங், என்ன செய்யரே? டிபன் ஆச்சா?
என்னம்மா புதுசா கேள்வி! இப்பொல்லாம் இட்லி, தோசை, உப்புமா எல்லாம் காலை வேளை டிபன் இல்லை.
நாங்க எல்லாம் ஒட்ஸ் தான் சாப்பிடுவோம். நான் அமெரிக்கா போய்ட்டு வந்ததிலிருந்து ஓட்ஸ் தான். ஸ்வாமிக்கு நைவேத்யமும் ஓட்ஸ் பாயசம்தான். ஒனக்கு ரெசிப்பி வேணுமானா தரேன்.

இந்த ஓட்ஸ் இருக்கே இதை தண்ணியிலே போட்டு, அடுப்பை பத்தவை. ஒரே ஒரு கொதிதான் வந்ததும் சர்க்கரையைப் போட்டு  பால் விட்டால் ரெடி. அதைக் கஞ்சின்னு சொன்னால் கஞ்சி, முந்திரிப்பருப்பை நெய்யிலே வருத்துப் போட்டால் பாயசம். ரொம்ப சுலபம் செய்வதற்கு, உடம்புக்கு நல்லது.

காலங்கார்த்தால எழுந்து வெங்காயத்தை நறுக்கு, இஞ்சிக்குத்   தோல் சீவு, சட்னி அரை, இந்த வம்பெல்லாம் கிடையாது. முக்கியமா வெயிட் போடாது. சரியா. வைக்கட்டுமா? 'ஜிம்முக்கு,' போவணும்.
                                       
இன்றைக்கு இந்த ஓட்ஸுக்கு வந்த வாழ்வைப் பாருங்கள்! அமெரிக்கர்கள் சாப்பிடுவதால் வந்த பழக்கம். நம் நாட்டு அரிசிக் கஞ்சிக்கும், ராகிக் கஞ்சிக்கும் இல்லாத ருசியா,சத்தா?

நம் நாட்டிலும், சைனாவிலும்தான் முதன் முதலாக கஞ்சி குடிக்கும் பழக்கம் இருந்ததாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

கஞ்சி நம் நாட்டின் மிக முக்கியமான உணவு. ஒரு மடங்கு அரிசிக்கு நான்கு டம்ளர் தண்ணீர் வைத்து  சமைத்தால்  கஞ்சி. அதுவும் புழுங்கல் அரிசி கஞ்சியில் துளி உப்புப் போட்டு, மோர் விட்டுக் குடித்தால் வயிறு நிறையும். வெண்கலப்பானையிலோ, மண்பானையிலோ சமைக்கும் போது அதிகமான தண்ணீரை வடிப்பார்கள். அதில் உப்பு, மோர் சேர்த்துக் குடித்தால் தேவாமிர்தமாக இருக்கும். அந்தக்கஞ்சியில் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்துக் குடித்தால் உடல் குளிரும்.

தற்போது புதிய கஞ்சி மெனுக்கள் வந்துவிட்டன. அமெரிக்கா,ஆஸ்த்ரேலியாவில் உள்ள சிட்னி ஆகிய நாடுகளில் கஞ்சி ஒரு ஸ்பெஷல் சாப்பாட்டு ஐட்டம் என்பது புதுச் செய்தி...... சந்திப்போம் கஞ்சி உணவு வகைகளுடன்.


7 Feb 2012

பேச்சு வகை

வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ பேர்களை சந்திக்கிறோம். எண்ணிலாத முகங்கள்! ஒவ்வொன்றும் ஒவ்வொறு வகை. நவரச முகங்கள்; நவரசப் பேச்சுக்கள். என் வழியில் வந்த சில பேச்சு வகைகள்!

அழுவது போல் தழுதழுத்து பாசம் காட்டுவதாய் வேஷமிட்டுப் பேசும்.
கோபத்துடன் கொந்தளித்து வாயில் வந்ததெல்லாம் சிந்திக்காமல் பேசும்.
பயத்தினால் நடுநடுங்கி உள்ளதைச் சொல்லாமல் திணறிப் பேசும்.
உள்ளத்தில் உள்ளதை வெளிக்காட்டாமல் பசப்பலுடன் புறம் பேசும்.
பிறர் சிரித்துப் பார்க்க வேண்டி வேடிக்கை கதை சொல்லிப் பேசும்.
பிறர் குரலைத் தன் குரலாய் மாற்றி வாய் பிளந்து கேட்கப் பேசும்.
ஊர் வம்பு எங்கே எனத் தேடித்தேடி தெருவெங்கும் திரிந்து பேசும்.
வெட்டொன்று  துண்டிரண்டாய் பட்டென்று கண்டிப்பாய்ப் பேசும்.
வெண்டைக்காய் வழுவழுப்பாய் நழுவி நழுவி வழுக்கப் பேசும்.
நீண்ட நெடுஞ் சாலைபோல் சுற்றி வளைத்து நெளிந்து ஒளித்துப் பேசும்.
எல்லாம் தெரிந்தும் புரியாதது போல் நடித்துப் பேசும்.
இழித்தும் பழித்தும் எதையும் பேசும் நாக்கு............
எப்போதும் சாய்ந்து கொள்ள என் தோள்கள் உண்டு எனக் கனிவோடு பேசும்.
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென வீரம் கொள வைத்துப் பேசும்.
யான் இருக்க பயமேன் என்று அணைத்துக் கொண்டு பேசும்.
பசித்தமுகம் பார்த்துப் பரிவோடு உணவளித்துக் கருணையுடன் பேசும்.
அன்பினால் அரவணைத்து கருணையெனும் சொல் கொண்டாரைப்
பார்த்தாலே அமைதி வரும்,நேசமுடன் பாசம் வரும் ஆனந்தம் பெருகும்.
இனிய சொல்லே என் நாவு பேச வேண்டும் இறைவா!
எப்போதும் உன் நாமம் புகல வேண்டும் தலைவா!
                             ---------------------

Prayers and meditations -The Mother.

1.  Let  thy  Light be in me like a  Fire  that  makes  all  alive ;  let  Thy  divine   Love  penetrate  me, I  aspire  with  all  my  being  for  Thy  reign  as sovereign  and  master  of  my  mind  and  heart  and body ;  let  them  be  Thy  docile  instruments  and  Thy  faithful  servitors. -- November 3, 1912.

மொழி பெயர்ப்பு; அனைத்தையும் உயிர்ப்பிக்கும் அக்னியைப் போல்  என்னிடத்தே தங்களின்  ஒளி நிலைக்குமாக. தங்களுடைய தெய்வீக அன்பு என்னை ஊடுருவுமாக.  தாங்களே என்னுடைய  மனம், இதயம், உடல் அனைத்திற்கும் தலைவராகவும், என்னை ஆளும் பேரரசராகவும் இருக்கவேண்டும் என்று முழுமையாக அவாவுகிறேன். என்னுடைய மனமும், இதயமும், உடலும் தங்களுடைய பணியாளனாகவும்,
தங்களால் இயக்கப்படும் கருவிகளாகவும் இருக்குமாக.




3 Feb 2012

மனிதச்சிலந்தி.

கோடிக்கணக்கான மென்மையான நினைவு இழைகளை
ஞாபகத்தறியினால் நெய்து, என்னைச் சுற்றி நானே
பின்னிய  எண்ணங்களாகிய  வலையின் உள்ளே
துக்கச் சுகத்தில் தூங்கிக் கிடக்கும் மனிதச்
சிலந்தி நான். வெளியே வருவதும் உள்ளே
போவதும், வருவதும் போவதும் பயணமாய்!
துக்கச்சுகம் உள்ளே இழுக்க, விவேகம்
வெளியே இழுக்க, முன்னதன் பின்னால்...,
என்ன முயன்றும்  வலையின் உள்ளே---  மனிதச்
சிலந்தி!




2 Feb 2012

GRACE.

At the very moment when everything seems to go from bad to worse
it is then that we must make a Supreme act of faith and know that the
Grace will never fail us.         
                              
THE MOTHER. 2.2.2012.