பூங்காவின் வழித்தடங்கள், கால் பதித்த தடயங்கள்,
கைகோர்த்து நடந்து சென்ற பாதைகளின் ஓரத்தில்
மணம் பரப்பும் செண்பகங்கள்! மலர்ந்து சிரிக்கின்ற
வண்ணப் பூக்கள், காற்றில் அசைந்தாடி வரவேற்கும்
மரக்கிளைகள், கள்ளமில்லா மென் சிரிப்பால் உள்ளம்
கவரும் சின்னக் குழந்தைகள், உன்னைத் தேடி, என்
முகம் நோக்கி மவுனமாய் வினா எழுப்பும்? ஆயின்
நானும் உன்னைத் தேடுகின்ற ரகசியத்தை நான்
வெளியே சொல்வதில்லை. சாலையோர மரமாய்,
செண்பகத்தின் பூவாய்,வீசுகின்ற காற்றாய்,
நிலவொளியின் தண்கதிராய், கதிரவனின் பொற்
கரமாய், வானிலும், நிலவிலும், மண்ணிலும்
உன்னையெங்கும் தேடுகின்றேன்! என்றாவது
உன்னைக் காண்பேனா? நீ வருவாயோ மாட்டாயோ,
நான் வருவேன் உன்னிடத்தில் நிச்சயமாய்!

No comments:
Post a Comment