கோடிக்கணக்கான மென்மையான நினைவு இழைகளை
ஞாபகத்தறியினால் நெய்து, என்னைச் சுற்றி நானே
பின்னிய எண்ணங்களாகிய வலையின் உள்ளே
துக்கச் சுகத்தில் தூங்கிக் கிடக்கும் மனிதச்
சிலந்தி நான். வெளியே வருவதும் உள்ளே
போவதும், வருவதும் போவதும் பயணமாய்!
துக்கச்சுகம் உள்ளே இழுக்க, விவேகம்
வெளியே இழுக்க, முன்னதன் பின்னால்...,
என்ன முயன்றும் வலையின் உள்ளே--- மனிதச்
சிலந்தி!
ஞாபகத்தறியினால் நெய்து, என்னைச் சுற்றி நானே
பின்னிய எண்ணங்களாகிய வலையின் உள்ளே
துக்கச் சுகத்தில் தூங்கிக் கிடக்கும் மனிதச்
சிலந்தி நான். வெளியே வருவதும் உள்ளே
போவதும், வருவதும் போவதும் பயணமாய்!
துக்கச்சுகம் உள்ளே இழுக்க, விவேகம்
வெளியே இழுக்க, முன்னதன் பின்னால்...,
என்ன முயன்றும் வலையின் உள்ளே--- மனிதச்
சிலந்தி!
No comments:
Post a Comment