யாரோ சொன்னார்கள் உன்னை மறக்கமுடியாதென்று! புயலடிக்கும் கடல் தன்னுடைய அலைகளாகிய தொட்டிலின் தாலாட்டில் அமைதியடையவில்லையா? காட்டுத் தீ சாம்பல் படுக்கையில் உறங்கவில்லையா?
நீயும் நானும் பிரிந்தாலும், அதனால் ஏற்பட்ட வெற்றிடத்தில் பசும் புல்லும், வண்ண மலர்களும் சூரிய ஒளியில் சிரிக்கின்றனவே! தென்றல் காற்றின் மென் தழுவல் சிலிர்க்கவைக்கிரதே! வட்டநிலா வான் வெளியில் ஒளி வீச உன் பொன்முகம் கண்டு என் உள்ளத்தில் தூய அன்பு பொங்கிப் பெருகும். அமைதி பிறக்கும். ஆனந்த அலைகள்தோன்றும். உன்னில் நான் அமைதியடைவேன். என்னில் நீ! நிசப்தத்தின் மடியில் நீயும் நானும்! பேசாத மவுனத்தின் இசைக்கும் ஒலியில் எல்லாம் மறக்க எய்தும் சுகம்! மறக்க முடியாத சுகம். நினைவுகளுடன் நிலைத்து நிற்கும் சுகம்.
No comments:
Post a Comment