பொங்கித் ததும்பும் ஆனந்தம்.
பிறை நிலவின் நடுவே ஒளி வீசும்,
மாணிக்கப் பரல்கள் போன்ற பற்கள்.
மலர்ந்து மகிழ்வைப் பரப்பும்
மந்தகாசப் புன்னகை.அமைதியை
அன்பை,அதில் விளையும் அழகை
ஆனந்தத்தைப் பிரதிபலிக்கும்
காந்தக் கண்கள்.மனதைச் சுண்டி
இழுத்துத் தன்னுள்ளே இணைக்கும்
பார்வை.வாழ்வின் வழிகாட்டி,
ஒளி பொருந்திய பாதையில்
மானுடத்தை அணைத்து அழைத்துச்
செல்லும் ‘அன்னை’ யின் பொற்
பாதங்களுக்கு வணக்கம்.
No comments:
Post a Comment