தனியே.
தனியே தாய் வயிற்றில் வாசம்,தனியே நிலமகள் மேல் ஜனனம்,தனியே விருப்பும், வெறுப்பும், தானே தனக்காய் வாழும்.
தனியே கடைசிப் பயணம்,தனியே நெருப்பில் தகனம்,
தனியே நீரில் கரையும், தனியே தானாய் மறையும்.
நான் என்றும் எனதென்றும் ,தானென்றும் தனக்கென்றும்
மாயச்சுழ்லில் சுழலும்.
நானும் இல்லை,நீயும் இல்லை,எனதும் இல்லை உனதும் இல்லை
காலம் போனால் எதுவும் இல்லை,காலன் வந்தால் ஒன்றும் இல்லை.
No comments:
Post a Comment