கழுத்துக்கு மைனர் செயின், கோட்டுடன் சூட்டு, பூட்சு, குடை, விசிறி,
கட்டிலுடன்.மெத்தை, போர்வை, காட்ரெஜ் பீரோ, சாப்பிட வெள்ளித்
தட்டு ,டம்ளர், தேனிலவுக்கு டிக்கெட், ஏ.சி. ரூம்,இத்தனையும் நீ
செய்தால், மஹாராஜாபோல நானும் உன் பக்கம் வந்து நின்று
கல்யாணம் செய்து கொள்வேன், சம்மதமா என்றான் தோழி!
நல்லவேளை இடுப்புக்கு ஒட்டியாணம், காதுக்கு வைரக் கடுக்கன்
காலுக்கு வீரக்கழல், இவையெல்லாம் வேண்டாமென்றாய்!
நான் என்ன வியாபாரம் பேச வந்தேன்,என்று நீ நினைத்தாயோடா?
பாவை நான் என்ன, தங்கச் சுரங்கம் வைத்துள்ளேனா? பக்கத்தில்
பணம் காய்க்கும் மரமும் இல்லை! பெற்றவர்கள் என்னை
பெண்மைக்குப் பெருமை சேர்க்க, நிமிர்ந்த நன்நடை, நேர்
கொண்ட பார்வை, கல்விச்செல்வம், விருந்தோம்பல், கொடை,
வீரம், தயவு, கருணை என நற்குணச் செல்வம் பலவும் பரிவுடன்
எந்தன் உள்ளம் மகிழ்ந்திடத் தந்துள்ளார்கள். உனக்கு
வாழ்க்கைத் துணை நலம் வேண்டுமா, அன்றிப் பொருள் கொடுத்து
உன்னை வாங்கும் வியாபாரி வேண்டுமா நீயே சொல்வாய்.
No comments:
Post a Comment