ஶ்ரீஅரவிந்தர்-6
பரோடாவில்..
(ஶ்ரீஅரவிந்தர் பரோடாவில் 1893, பிப்ரவரி 8 முதல், 1906, ஜூன் 18 ஆம் தேதிவரை 13 ஆண்டுகள் சாயாஜிராவ் மகாராஜாவின் சமஸ்தானத்தில் பணியாற்றினார். பணியில் சேரும் போது அவருடைய வயது 21. தனது 34 ஆம் வயது வரை பணியாற்றிய பின் அவர் வங்கத்திற்குச்சென்றார்.)
அரவிந்தருக்கு அவரது தந்தையார் மறைந்த துயரச் செய்தி துன்பத்தை அளித்தது. ஆனாலும் கடமை உணர்வு மிக்க அரவிந்தா ஊருக்குச் செல்லாமல் பரோடா மகாராஜாவின் சமஸ்தானத்தில் அவரது உதவியாளராகச் சென்று சேர்ந்தார். அங்கு பலவிதமான அரசாங்கப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டார். சில நாட்களுக்குப் பின் பரோடா சாயாஜிராவ் கல்லூரியில் ஆங்கிலமும், பிரெஞ்சும் கற்றுக் கொடுக்க நியமிக்கப்பட்டார்.பிறகு துணை முதல்வரானார்.
ஆனால் மகாராஜா அழைக்கும் போதெல்லாம் சென்று முக்கியமான கடிதங்களையும், அவர் ஆற்ற வேண்டிய சொற்பொழிவுகளையும்,அரசாங்கத்தின் முக்கியமான தஸ்தாவேஜுகளையும் தயார் செய்து கொடுப்பார்.
ஒரு முறை மகாராஜா சொன்னார்," அரவிந்த்பாபு, மிகச் சிறந்த இந்தக் கட்டுரையைக் கொஞ்சம் எளிய நடையில் எழுதிக் கொடுங்கள். இதை நான் வாசித்தால் யாரும் இதை நான் தயாரித்ததாக எண்ணமாட்டார்கள்!
அரவிந்தர் - " எப்படி இருந்தாலும் நீங்கள் தயாரித்த சொற்பொழிவு என்பதை யாரும் நம்பப் போவதில்லை! சொல்ல வந்த கருத்து இருக்கிறதா என்பதை மட்டும் பாருங்கள், போதும். மொழியின் ஆளுமையைப் பற்றி கவலைப் படாதீர்கள். "
சாயாஜிராவின் தனிப்பட்ட உதவியாளராகப் பணியாற்ற அவர் தயங்கியதே இல்லை. தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை மிகுந்த கவனத்துடன், அக்கறையாக செய்து கொடுப்பதில் மகிழ்வார். அவர் மிகக் குறைவாகவே பேசுவார். கேட்ட கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிப்பார்.மற்ற நேரங்களில் புத்தகங்கள் வாசிப்பதிலும், கவிதை, கட்டுரைகள் எழுதுவதிலும் நேரத்தைச் செலவழித்து வந்தார்.
பரோடா வந்த ஆறு மாதங்களில் இந்திய அரசியல் நிலைமை, மக்களின் மனநிலை, அரசியல்தலைவர்கள், அவர்களுடைய கொள்கைகள், ஆகிய அனைத்தையும் அறிந்து கொண்டார்.
கே.ஜி. தேஷ்பாண்டே என்பவர் கேம்பிரிட்ஜில் அரவிந்தரின் நண்பர்.
அவர் " இந்துப்பிரகாஷ்" என்ற பத்திரிகையின் எடிட்டராக இருந்தார்.அவர் அரவிந்தரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், அவர்களுடைய லட்சியம், அரசியல் முன்னேற்றம், ஆகியவற்றைப் பற்றி எழுதும்படி கேட்டுக் கொண்டார்.🙏

No comments:
Post a Comment