சென்ற வாரம் ஒரு நாள் கண்ணாடி பாட்டில்கள் விற்கும் கடையொன்றுக்குச் சென்றிருந்தேன். ஜெயநகரில்தான்! பீங்கான் மற்றும் சமையலறைச் சாமான்கள் சிலவும் அங்கே உண்டு.
ஊறுகாய் பாட்டில்கள் எல்லாம் பழைய காம்ப்ளான், ஹார்லிக்ஸ் பாட்டில்கள்! பார்த்து அலுத்துப் போனதால் புதிதாய் வாங்கலாம் என்றுதான்.
எல்லா வடிவங்களிலும் அளவுகளிலும் இங்கே பாட்டில்கள் உள்ளன. குட்டியூண்டு பாட்டில்கள் ஊருக்குப்போகும்போது மாத்திரைகள் போட்டுக்கொள்ள வசதியாய்! சும்மா கொலுவில்கூட வைத்து அழகு பார்க்கலாம்!
பாட்டில்கள் வாங்கி முடித்த நேரத்தில் கண்ணில் பட்டது பூச்சாடிபோன்ற ஒரு குடுவை. உடனே செல்லமாக என் அறையில் வளரும் கொடியொன்றை வைக்க ஆசை கொண்டேன். லேசான குடுவைதான்.
பத்திரமாகக் கொண்டு வந்து அதைச் சற்றே சிறு கற்களால் நிரப்ப ஆரம்பித்தேன்! டொக்கென்று விரிசல்.ம்...என்ன செய்வது.?
இரண்டு நாட்களாக அலமாரியில் தூஙகியது ஓய்வாக. இன்று பொழுது போகாமல் சுற்றிய நேரத்தில் கண்ணில்பட்டது கலர் ட்யூபுகள். பாட்டிலின் கலர் மாறிப்போச்சு.
இப்படியாக பாட்டிலில் வண்ணம் பூசியதற்காக ...ஆனந்தம்.

No comments:
Post a Comment