அரவிந்தரின் கைது அவரது வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது.அரசியலிலிருந்து விலகி முழுமையாக தன்னையறியும் தவ வாழ்வை அவர் மேற்கொண்டார்.
குண்டு வெடிப்பில் அரவிந்தருக்கு தொடர்பு இருக்கவில்லை என்றாலும் அவருடைய எழுத்துகள் சுதந்திரத் தீயை மூட்டுவதாய் இருந்தது. எப்படியாவது அவரை அரசியலில் இருந்து முடக்கிவிடவேண்டும் என்பதற்காகவே அவர் கைது செய்யப்பட்டர்.
இறைவனோ அவர் ஆன்மிகத்தில் நுழைய, தவ வாழ்வு மேற்கொள்ள, பயணிக்கும் பாதையைக் காண்பிக்கும் ஆரம்ப பாடசாலையாக சிறைச்சாலையை மாற்றினார்.
இறைவனோ அவர் ஆன்மிகத்தில் நுழைய, தவ வாழ்வு மேற்கொள்ள, பயணிக்கும் பாதையைக் காண்பிக்கும் ஆரம்ப பாடசாலையாக சிறைச்சாலையை மாற்றினார்.
எப்படி சிறைச் சாலையை தவச் சாலையாய் மாற்றியது இறையருள்? தனிமைச் சிறையில் அடை பட்ட அரவிந்தரை வசுதேவ தெய்வ சக்தி ஆட்கொண்டது. "எல்லா இடத்திலும் என்னுடையே சக்தியே நிறைந்துள்ளது. எல்லோருடைய இதயத்திலும் மறைந்திருப்பவன் நானே. நானன்றி வேறில்லை" என்றது. மேலும் தன்னை எங்கெங்கும் காணச்செய்தது.
அவரது தனிமைச் சிறை அறையின் ஒரு புறம் பசுக்கொட்டில், மறுபுறம் சிறைச்சாலைப் பணியிடம்.
அரவிந்தருக்கு அவரது அறையிலிருந்து வெளி வந்து நடை பயில அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு நடை பயிலும் போது அவர் சக்தி வாய்ந்த உபநிஷத மந்திரங்களை உச்சரித்துக் கொண்டும், பணியாற்றும் கைதிகளை ஆழ்ந்து உற்று நோக்கி அவர்களுக்குள் மறைந்து நிற்கும் இறைச் சக்தியைக் காணவும் முயல்வார்.
" sarvam khalvidam brahma" எல்லாம் இறைமயம், எல்லோரிடத்திலும் இறைவன் உள்ளான் எந்ற உபநிஷத மந்திரத்தின் உண்மை அனுபவத்தை அவர் அப்போது பெற்றார்.

"சிறைச் சாலையின் உயரமான சுவர் எனக்கு வசுதேவராகவே காட்சியளித்தது.
என் தனிமைச் சிறையின் முன்னால் இருந்த மரமும் கூட வசுதேவராய் எனக்காக நிழல்தரும் கிளைகளைத் தாங்கி நிற்பதைக் கண்டேன்.
சிறைக் கதவுகளும், காவல் செய்தவனும் கூட வாசுதேவனாய்க் காட்சியளித்தனர்.
எனக்கு கரகரப்பான போர்வையும், விரிப்பும் கொடுக்கப்பட்டிருந்தன. அந்தப் போர்வை கண்ணனாகிய என் காதலனின், நண்பனின் அன்புக்கரங்களின் அணைப்பாய் இதம் தருவதாய் இருந்தது.
சிறைச் சாலையில் உடன் இருந்த கொள்ளையர்கள், கொலைகாரர்கள், திருடர்கள் அனைவரிடமும் நான் நாராயணனைக் கண்டேன்."
நீதிமன்றத்தில் அலிப்பூர் சதி வழக்கு ஆரம்பமானது.
நீதிமன்றத்தில் இரும்பாலான கூண்டுக்குள் அமர்ந்திருந்த போது அவர் காதில் மீண்டும் ஒலித்தது அந்தக் குரல்!
"கண்விழித்துப் பார்"என்றது. அந்த நீதி மன்றத்தின் நீதிபதியும், அவருக்காக வாதாட வந்த வழக்கறிஞரும் வசுதேவராகவே காட்சி அளித்தனர்.
"இப்போது உன் பயம் நீங்கியதா? நானே அனைவருடைய மனதிலும் வீற்றிருந்து அவர்களுடைய சொல்லாகவும், செயலாகவும் இருக்கிறேன். உன்னை நானே பாதுகாக்கிறேன்.
நீதி மன்றத்தில் வழக்கு நடை பெறும் போதும் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் தன்னுள் ஆழ்ந்து தியானத்தில் இருப்பார் அரவிந்தர். தன்னுள்ளிருந்து ஒலித்த அந்தக் குரலை மட்டுமே அவர் செவி மடுத்தார்.
அக்குரல் மீண்டும் சொல்லியது, "நானே வழக்கை வழி நடத்துகிறேன். பயம் வேண்டாம். உனக்காகக் கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய். "
காரண காரிய தொடர்புகளுக்கு அப்பாற்பட்ட, வியக்கத்தக்க பல அனுபவங்களும் அவருக்கு சிறைச்சாலையில் ஏற்பட்டன. சுவாமி விவேகாநந்தரின் குரல் அவருக்கு யோகசாதனையின் குறிப்பிட்ட வழிமுறைகளைப் பற்றி பதினைந்து நாட்களுக்கு உரையாற்றியது.
யோக சாதனையின் போது அவருடைய உடல் பூமியில் படாதவாறு மேலெழும்புகின்ற காட்சியை சிறைக் காவலர்கள் பகிர்ந்துள்ளனர்.
யோக சாதனையின் போது அவருடைய உடல் பூமியில் படாதவாறு மேலெழும்புகின்ற காட்சியை சிறைக் காவலர்கள் பகிர்ந்துள்ளனர்.
நாள்தோறும் அறிவியலால் விளக்கம் தர முடியாத பல அனுபவங்களையும் இறைவன் எனக்குத் தந்தான் என்கிறார் திரு அரவிந்தர்.
".....Day after day He showed me His wonders", says SriAurobindo....things were opened to me which no material science could explain ".
கல்கத்தாவிலிருந்து வெளிவந்த "சஞ்சீவினி," என்ற பத்திரிகை அரவிந்தர் சார்பில் வழக்கை நடத்துவதற்காக நிதி வசூல் செய்தது. நீதிபதி நார்ட்டன் என்பவர் எந்த விதத்திலும் அரவிந்தர் விடுதலை ஆகாமலிருக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் அரவிந்தருடன் லண்டனில் கல்வி பயின்ற சி.ஆர். தாஸ் அரவிந்தரின் வழக்கை எடுத்து நடத்தினார்.
அதற்குக் காரணமாக அமைந்தது சரித்திரப் புகழ் பெற்ற சி. ஆர். தாசின் பேச்சு.'இந்த வழக்கு முடியலாம். குற்றம் சாட்டப்பட்டுள்ள இவரோ மாபெரும் கவிஞர், தேசியவாதத்தின் தலைவர், சகமனிதநேயமிக்கவர், நாட்டுப்பற்று நிறைந்த இவருடைய எழுத்துகள் காலத்தால் அழியாதவை. சரித்திரத்தில் இடம் பெற வேண்டியவை.
ஆகவே இந்த வழக்குடன் சற்றும் தொடர்பில்லாத இவர் குற்றமற்றவர் என்றார்.
1908,மே 2ஆம் நாள் கைது செய்யப்பட்ட அரவிந்தர் 1909 மே 5 ஆம் தேதி விடுதலை செய்யப் பட்டார்.
(குறிப்பு: சிறைவாசம்,அனுபவங்கள், வழக்கு, விடுதலை)