வாசலில் காலிங் பெல் தொடர்ந்து ஒலிக்கிறது......!
தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்த பர்வதம்மா, 'யாரது,' என்று கொஞ்சமாகக் கதவைத் திறந்து எட்டிப் பார்க்கிறார்!
நாந்தான் ஆண்டி, சாரி தூங்கினவங்கள எழுப்பிட்டேனோ, என்று குதிக்கிறாள் சாருமதி!
என்ன அப்படி குஷி, உள்ள வா என்கிறார் பர்வதம்.
இல்லம்மா உங்கள எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு போகதான் வந்தேன். சூப்பரா கொலு வெச்சுட்டேன். நீங்க வந்து சரியான்னு சொல்லணும் அவ்வளவுதான்!
அதுதான் 'புக் ' குடுத்தேனே........?
ஆமாம், நீங்க சுஷிமா ஆண்டியோட,' நவராத்திரி ' புக் கொடுத்தீங்களே அதை வெச்சுதான் கொலு வெச்சேன்! எங்க மாமியார் பாட்டுக்கு திருநெல்வேலில உக்கந்துட்டு கொலு வெச்சுதான் ஆகணும்னு சொல்லிட்டாங்க. சரஸ்வதி பூஜைக்கு முதல்நாள்தான் வருவாங்களாம்! எனக்கு இந்த பண்டிகைய பத்தியெல்லாம் ஒன்னும் தெரியாது! எங்க வீட்டில அம்மா கொலு வெப்பாங்க. சுண்டல் குடுத்தா சாப்பிடுவேன் அவ்ளோதான். படிப்பு படிப்புன்னு இருந்துட்டு இப்போ என்ன செய்வது? எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லிக்க வெட்கம்!
ரொம்ப சந்தோஷம்மா!
அந்த புக் உனக்கு எப்படியெல்லாம் உபயோகமாயிருந்ததுன்னு சொல்லு.
ஏன் கொலு வைக்கிறோம், எந்தஎந்த ஊருல எப்படி கொண்டாடுவாங்கன்னு சொல்லியிருக்காங்க.
இந்த ராமாயணத்துக்கும், மகாபாரதத்துக்கும் நவராத்திரிக்கும் என்ன தொடர்பு என்று இதுவரையிலும் எனக்கு தெரிஞ்சிருக்கல.
தேவி மஹாத்மியத்துக்கும் நவராத்திரிக்கும் என்ன சம்பந்தம்? வட இந்தியாவில ராம்லீலா, தென்னிந்தியாவில விஜய தசமி .... வினாவிடை போட்டிவச்சா நல்லா இருக்கும்! முதல் பரிசு எனக்குதான்.....
அதுக்கப்புறம் சுண்டல், புட்டு எப்படி செய்வதுன்னு சொல்லியிருக்காங்க. ஆனா இந்த பாயசம், தினம் ஒரு சித்ரான்னம் எப்படி செய்வதுன்னு சொல்லியிருக்கலாம். எங்க வீட்டில விஜய தசமிக்கு பானகம் செய்வாங்க!
அவங்க சொல்லியுள்ளபடியே அலங்காரம் செய்தேன். முக்கியமா வந்தவங்களுக்கு கொடுக்கும் மஞ்சள், குங்குமம், சந்தனம் இதெல்லாம் வாங்கிட்டு வரணும். வருகிறவங்களுக்கு பரிசுகள் எல்லாம் எங்க மாமியார் ஒத்துக்க மாட்டாங்க! 'ஆண்டி' யோட புக்க எங்க மாமியார்கிட்டயும் வாசிச்சு காட்டிவிடுவேன். அப்பதான் அவங்க நம்புவாங்க.
கடைசி நாள் ஆரத்தி எடுப்பதும், பாட்டுப் பாடுவதும் எப்படின்னு மட்டுமில்லாம பாட்டுகளையும் எழுதிட்டாங்க. மொத்தத்தில நவராத்திரி வைக்கும் என்னப் போல சின்னவயசுக்காரங்களுக்கு
சுஷிமா சேகர் அவங்களோட புத்தகம் ஒரு வரப்பிரசாதம்னுதான் சொல்லணும்.
ஆங், மறந்துட்டேனே, எனக்கு ஒரு பத்து புத்தகம் வரவழைச்சுக் கொடுத்தீங்கன்னா எல்லோருக்கும் கொடுக்க வசதியாக இருக்கும். அவங்க புத்தகம் எங்க கிடைக்கும்?
சென்னையில ''முன்னேர் பதிப்பகம்னு'' புதுசா புத்தகங்கள் அச்சிட்டு வழங்குகிறார்கள். அவங்களுக்கு ஈமெயில் அனுப்பினா எத்தனை புக் வேணுமானாலும் வாங்கலாம். தொடர்புக்கு ;
Ph: +91-(0) 8050949676
Email : munnerpub@gmail.com